Monday, March 18, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புகோடைக்கு ஏற்ற தேங்காய்ப்பால் புலாவ்! சுவையாக இப்படி செய்து பாருங்கள்!

    கோடைக்கு ஏற்ற தேங்காய்ப்பால் புலாவ்! சுவையாக இப்படி செய்து பாருங்கள்!

    கோடைக்காலத்தில், அதிக வெப்பத்தின் காரணமாக உடல் சூடு ஏற்படுகிறது. இதனை குறைக்க சுவையான ஆரோக்கியமான தேங்காய்ப்பால் புலாவ் செய்யலாம் வாங்க… 

    தேவையான பொருட்கள்: 

    1. தேய்ங்காய்ப்பால் – 1 கப் 
    2. அரிசி – 2 டம்ளர் 
    3. பட்டை – 2 
    4. லவங்கம் – 3 
    5. பிரியாணி இலை – 2
    6. ஏலக்காய் – 3 
    7. பச்சை மிளகாய் – 4 
    8. பட்டாணி – கால் கப் 
    9. முந்திரி – 10
    10. புதினா தழை – 1 கைப்பிடி 
    11. மல்லித்தழை – 2 இணுக்கு 
    12. இஞ்சி, பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி 
    13. சீரகம் – கால் தேக்கரண்டி
    14. எண்ணெய், நெய், உப்பு, தண்ணீர் – தேவையான அளவு 

    செய்முறை: 

    • ஒரு குக்கரில் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, முந்திரி போன்றவற்றை சேர்த்து வதக்க வேண்டும். பின் அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். 
    • பிறகு அதனுடன், ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும். மேலும் பச்சைமிளாகாய் மற்றும் சீரகத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதனுடன், ஒரு கைப்பிடி அளவைவிட சற்று குறைவாக புதினா இலைகளை சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும். 
    • புதினா வதங்கியதும், பட்டாணியை சேர்த்து இரண்டு, மூன்று நிமிடங்கள் வதக்கியதும் தேவையான அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். நீங்கள் விருப்பப்பட்டால் கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்ற காய்களையும் சேர்த்து குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். 
    • பின் தேய்ங்காய்ப்பால் ஊற்றி, அதனுடன் இரண்டு டம்ளர் அரிசியையும் சேர்க்க வேண்டும். ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் தேவைப்படும். நாம் தேய்ங்காய்ப்பாலையும் தண்ணீரோடு கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். எனவே, ஒன்று அல்லது ஒன்றரை டம்ளர் வீதம் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு மல்லித்தழையை தூவி மூடிவிட வேண்டும். 
    • அரிசி ஊறிய நேரத்தை பொறுத்து, இரண்டு அல்லது மூன்று விசில்கள் விட்டு இறக்கியயதும் சிறிது நெய் ஊற்றி பரிமாறினால் சுவை அள்ளும்.

    இந்த தேங்காய்ப்பால் புலாவ் உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் சுறுசுறுப்பையும் தரும். 

    கோடையில் ஏற்படும் உடல் உபாதைகள் பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்…தவிர்த்துக் கொள்ளுங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....