Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்அழகுக் குறிப்புஇந்த கோடைக்காலத்தில் சன்ஸ்கிரீன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ளவேண்டியவைகள் இதோ!

    இந்த கோடைக்காலத்தில் சன்ஸ்கிரீன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ளவேண்டியவைகள் இதோ!

    சன்ஸ்கிரீன் என்பது சூரியனின் புறஊதாக்கதிர்களிடமிருந்து நமது சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. இதற்காக தான் அனைவரும் சன்ஸ்கிரீனை பயன்படுத்துகின்றனர். இந்த சன்ஸ்கிரீனை பயன்படுத்தும் முறை கடந்த 10 முதல் 15 ஆண்டுகாலமாக தான் நமது இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. காரணம், இந்த காலங்களில் தான் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. புற ஊதாக்கதிர்கள் சருமத்தில் நேரடியாக படுவதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது. அதனால், என்ன ஆபத்துகள் வரும் என்பது மக்களுக்கு சமீப காலமாகத்தான் புரியத் தொடங்கியது. 

    இரண்டு வகையான சன்ஸ்கிரீன்கள் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவை வேதியியல் சன்ஸ்கிரீன் மற்றும் உடற்பயிற்சி சன்ஸ்கிரீன் ஆகும். வேதியியல் சன்ஸ்கிரீன் அதிகமான அளவு சூரிய கதிர்களை எதிர்த்து தாங்கி நிற்கும். உடற்பயிற்சி சன்ஸ்கிரீன் என்பது முழுவதுமாக சூரிய ஒளிக்கதிர்களை முகத்தில் அண்டவே விடாது. இந்தவகை சன்ஸ்கிரீன் உடலோடு ஒன்றிணைந்து வெளியில் பார்ப்பதற்கு தெரியாமல் இருக்கும். இதைத்தான் விளையாட்டு வீரர்கள் வெயில் காலங்களில் விளையாடும் போது அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்தவகை சன்ஸ்கிரீன் பார்ப்பதற்கு வெளிப்படையாக தெரியும். 

    SPF என்பது என்ன இதனின் முக்கியத்துவம் யாது? 

    SPF என்பது சூரிய பாதுகாப்பு காரணி (sun protection factor) ஆகும். நாம் வாங்கும் அனைத்து சன்ஸ்கிரீன் வகைகளிலும் அது குறிப்பிடப்பட்டிருக்கும். இதன் மூலம் எந்த அளவு சன்ஸ்கீரின்கள் சூரிய கதிர்களின் தாக்கத்தை குறைக்கும் என்பதை பொறுத்து நாம் அதனை வாங்கலாம். நாம் வாழும் நாட்டின் காலநிலைக்கு ஏற்ப அதனை தேர்வு செய்யலாம். SPF30, SPF50, SPF100 போன்ற நிறைய வகைகள் இருப்பினும் நம் இந்திய நாட்டிற்கு போதுமானதாக SPF30 இருக்கும். இதன் அடிப்படையில் தான் சன்ஸ்கிரீனின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 

    எந்ததெந்த சருமங்களுக்கு என்ன வகை? 

    எண்ணெய் பசை மிக்க சருமத்திற்கு க்ரீம் மற்றும் ஜெல் வகைகளைப் பயன்படுத்தலாம். வறண்ட சருமத்திற்கு லோஷன் போன்றும் கிரீம் போன்றும் பயன்படுத்தலாம். 

    எந்த அளவு பயன்படுத்த வேண்டும்? 

    மிகக் குறைவாகவும், மிக அதிகமாகவும் இதனைப் பயன்படுத்தக் கூடாது. காரணம் மிகக் குறைவாக பயன்படுத்தும் போது நமது சருமத்தை குறைந்த அளவே பாதுகாக்கும் மேலும் அதிகளவு பயன்படுத்தினாலும் அது எத்தனை மணி நேரம் வரை தாங்குமோ அவ்வளவு தான் தாங்கும். நாம் அதிகமா பயன்படுத்துவதால் அதிக நேரம் இருக்கும் என்று நாம் நினைப்பது தவறு. ஒரு மீட்டர் முதல் 1.5 மீட்டர் முக அளவுக்கு  5 மிலி முதல் 6, 7 மில்லிகள் வரை பயன்படுத்தலாம். 

    எந்ததெந்த இடைவெளியில் பயன்படுத்த வேண்டும்? 

    நீங்கள் 20 முதல் 30 நிமிடங்களுக்கு முன்பே சருமத்தில் பயன்படுத்திவிட்டு பிறகு, வெயிலில் செல்ல வேண்டும். வெளியில் சென்ற பிறகு, அரை மணி நேரம் கழித்து மீண்டும் பயன்படுத்த வேண்டும். சில சன்ஸ்கிரீன்களை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதின் மூலம் சூரியக் கதிர்களில் இருந்து நமது சருமத்தை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். 

    சன்ஸ்கிரீன் ஏன் பயன்படுத்த வேண்டும்? 

    சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதின் மூலம் சூரியனின் புறஊதாக்கதிர்களால் நம் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படுகிறது. மேலும், சன்ஸ்கீரின் நமது சருமத்தில் எந்தவித அழுக்குகளையும் சேர விடாமல் பாதுகாக்கிறது. 

    யார் யார் பயன்படுத்தலாம்? 

    ஐந்து வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனைப் பயன்படுத்தலாம். சிலர் சொல்வதுண்டு கருப்பாக இருப்பவர்கள் சன்ஸ்கிரீனை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று, அப்படியல்ல! எந்த நிற சருமமாக இருந்தாலும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தலாம்.

    ல்லா நிற சருமத்தையும் புறஊதாக்கதிர்கள் தாக்கும். நிறமோ வடிவமோ இதற்கு முக்கியமில்லை. வெளியில் அடிக்கடி செல்பர்கள் இதனை அவசியமாக பயன்படுத்த வேண்டும். மேலும் வெயிலில் சென்றால் சரும பாதிப்பு ஏற்படும் என்பவர்கள் இதனைக் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும். 

    சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது முற்றிலும் நன்மையே… 

    இதையும் படியுங்கள், நோன்பு திறக்கும்போது பானத்தை இப்படி ஜில்லுனு செய்து குடித்துப் பாருங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....