Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புதேங்காய்ப் பால் பிரிஞ்சி சாதம் செய்வது எப்படி ?

    தேங்காய்ப் பால் பிரிஞ்சி சாதம் செய்வது எப்படி ?

    நம் அனைவருக்கும் தேங்காயின் நன்மைகள் பற்றி நன்றாகவே தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அதன் நன்மைகள் முழுமையாக பெற்றிட சிலர்  தேங்காய் பாலினை  தினசரி அருந்துபவர்களும் உண்டு. இந்த தேங்காய்ப்பாலில் சுவையான பிரிஞ்சி சாதமும் செய்யலாம்.

    coconut milk

     தேவையான பொருட்கள்:

    பாசுமதி அரிசி – 2கப் 

    வெங்காயம்      – 3

    இஞ்சிப்பூண்டு விழுது – 2ஸ்பூன் 

    ப மிளகாய்           – 5 (அரைத்துக்கொள்ளவும்)

    ப பட்டாணி       – 1/4கப் 

    கேரட்                  – 1

    பீன்ஸ்                 – 8

    உ கிழங்கு         – 1

    மீல் மேக்கர்      –  தேவைக்கேற்ப 

    ஏலக்காய்          – 3

    சோம்பு              – 1 டீஸ்பூன் 

    பட்டை               – 1/2 இன்ச் 

    லவங்கம்           – 4

    நட்சத்திர சோம்பு  – 2

    பிரிஞ்சி இலை -2

    முந்திரி               – 10

    தேங்காய் – அரை மூடி 

    புதினா – கையளவு 

    கொத்தமல்லி – கையளவு 

     உப்பு  – தேவையான அளவு 

    எண்ணெய் – தேவையான அளவு 

    நெய்  – 1ஸ்பூன் 

    birinji

    செய்முறை :

    பாசுமதி அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சிஇலை ,ஏலக்காய், சோம்பு,பட்டை, லவங்கம், முந்திரி, நட்சத்திர சோம்பு போட்டு தாளித்ததும், வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த பச்சை மிளகாய் மற்றும் இஞ்சிப்பூண்டு விழுதை சேர்க்கவும். இவை அனைத்தையும் அடிப்பிடிக்காதவாறு வதக்கவும். வதங்கியதும் நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு காய்களுடன் பச்சை பட்டாணியையும் சேர்க்கவும். காய்கள் இந்து நிமிடம் எண்ணெய்யில் வதங்கியதும்,சுடுநீரில் ஊறவைத்த மீல் மேக்கர் சேர்க்கவும். இதனுடன் கைப்பிடி புதினா தழைகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.birinji பின்பு அரை மூடி தேங்காயை மிக்ஸியில் நன்றாக அரைத்து தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ளவும். 2கப் பாசுமதி அரிசிக்கு 3கப் தேங்காய்ப்பால் அளந்து ஊற்றவும். ருசிக்கேற்ப தேவையான அளவு உப்பு சேர்த்து, கடைசியாக கொத்தமல்லி மற்றும் ஒருஸ்பூன் நெய் விட்டு குக்கரை மூடவும். குக்கர் 2 விசில் வந்ததும் மிதமான தீயில் இந்து நிமிடங்கள் வைத்திருந்து அடுப்பை அணைக்கவும். இப்பொழுது சுவையான தேங்காய்ப்பால் பிரிஞ்சி சாதம் தயார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....