Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்! முட்டை சேர்க்காத ரவா கேக் இனி வீட்டிலே செய்யலாம்..

    கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்! முட்டை சேர்க்காத ரவா கேக் இனி வீட்டிலே செய்யலாம்..

    கிறிஸ்துமஸ் தினத்திற்கு அனைவரும் எதிர்ப்பார்ப்பது கேக் தான். வித விதமாக தற்போது கேக்குகள் செய்து கடைகளில் விற்கிறார்கள். அப்படி விற்கும் கடைகளில் என்னென்ன கலக்குகிறார்கள் என்பது நமக்கு தெரியாது. அப்படி இருக்க வீட்டிலேயே, நம்மிடம் இருக்கும் பொருள்களை வைத்தே சுவையான இனிப்பான கேக்கை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம். 

    தேவையானப் பொருட்கள்:

    1. ரவை- ஒரு கப்
    2. தயிர்- அரை கப்
    3. எண்ணெய்- அரை கப் 
    4. பால்- அரை கப் 
    5. சர்க்கரை- முக்கால் கப் 
    6. சோடா மாவு- அரை தேக்கரண்டி 
    7. எலுமிச்சை- சுவைகூட்டி 6 சொட்டுகள் 
    8. உப்பு- சிறிதளவு
    9. தண்ணீர்- தேவையான அளவு

    செய்முறை:

    • ஒரு பாத்திரத்தில் தயிர், எண்ணெய் ஊற்றி கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், அதில் பால் அரை கப் ஊற்றி கட்டியாக இல்லாமல் கலக்க வேண்டும். இவை மூன்று பொருள்களையும் சம அளவில் எடுக்கும் விதமாக ஒரே கப்பை பயன்படுத்த வேண்டும். 
    • பிறகு அதில், ஒரு கப் நன்றாக பொடியாக இருக்கும் சுத்தமான ரவை மற்றும் அரை தேக்கரண்டி சோடா மாவு சேர்த்து ஒன்றாக கலக்க வேண்டும். 
    • இதையடுத்து ரவை கலவையை, ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஓவன் இருந்தால் 175 டிகிரி செல்சியஸ் வைத்து 25 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். 
    • ஓவன் இல்லாத பட்சத்தில், அடி கனமான குக்கர் அல்லது தவாவை 10 நிமிடங்கள் முன்னதாகவே, சூடேற்றிக் கொள்ள வேண்டும். அதில் சமமான ஸ்டான்ட் அல்லது குட்டி கிண்ணத்தை வைத்து பிறகு அதன் மேல், நாம் பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்த ரவை கலவையை வைக்க வேண்டும். 
    • இதன் பின், காற்று செல்லாத வண்ணம் மூடிட வேண்டும். 30 நிமிடங்கள் வேக வைத்த பின், சிறு குச்சியை எடுத்து குத்தி, பார்த்திட வேண்டும். அப்போது குச்சியில் எந்த மாவும் ஒட்டவில்லை என்றால் கேக் வெந்துவிட்டது என்று அர்த்தம். 
    • பிறகு கேக்கின் மேல் இனிப்பு கூட, சர்க்கரை பாகு எடுக்க வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கால் கப் சர்க்கரை அதற்கு கொஞ்சம் கூட தண்ணீர் விட்டு ஓரிரு நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
    • பிறகு அதனுடன் உங்களுக்கு பிடித்தமான எசென்ஸ் அதாவது எந்தச் சுவை பிடிக்குமோ (எலுமிச்சை, புதினா, ரோஸ், வெண்ணிலா) அதனை 5 ஆறு சொட்டுகள் சேர்த்து கலக்கிய பின் பாகினை கேக்கின் மீது கொஞ்சம் கொஞ்சமாக ஊற்ற வேண்டும். 

    சிறிது நேரம் கழித்து கேக் ஆறியதும் சமமாக வெட்டி பரிமாறினால், உங்கள் வீட்டிலும் இனிப்பும் மகிழ்ச்சியும் பொங்கும்..

    புளியோதரை, புளிக்காய்ச்சல் செய்வது எப்படி ?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....