Sunday, March 17, 2024
மேலும்
    Homeவாழ்வியல்விவசாயம்ஏன் மண் வளம் முக்கியம்?

    ஏன் மண் வளம் முக்கியம்?

    ஒரு நாட்டின் வளம் என்பது மண் வளமே ஆகும். இதில் விளையும் பயிர்களும், அதனை உண்ணும் மிருகங்களும் இல்லாவிட்டால் அந்த நாட்டின் வளம் என்ன ஆகும் என்பதை பார்க்க சஹாரா பாலைவனம் உள்ள மத்திய ஆப்ரிக்க நாடுகளை பார்த்தலே தெரியும். ஒரு இன்ச் மண் (top soil) உருவாக்க இயற்கைக்கு 1000 வருடங்கள் தேவை ஆகிறது.

    Top soil… 

    Top soil மண் நிலத்தில் 5 இன்ச் வரை மேலே இருந்து இருக்கும் மண். இதில் தான் தாவரங்களுக்கு தேவையான எல்லா சத்துக்களும், நுண்ணுயிரிகளும் இருக்கின்றன. ஆனால, நம் தலைமுறை மேல் மண்னை வெகு வேகமாக இழந்து வருகிறோம். இதே வேகத்தில் நாம் மேல் மண்ணை இழந்தால் 60 ஆண்டுகளில் விவசாயமே செய்ய முடியாது என்கிறது உலக உணவு நிறுவனம்.

    நம் நாடு ஒரு காலத்தில் மண் வளத்தில் முன்னோடியாக இருந்தது. தொழிற்படுத்த விவசாயம், காடுகள் அழிப்பு, வறட்சி உள்ள இடங்களில் மரங்கள் அழிப்பு போன்றவை இந்தியாவின் மண் வளம் குறைய காரணம் ஆக இருக்கிறது. இப்போதே, உலகத்தில் உள்ள மேல் மண்ணில் மூன்றில் ஒரு பகுதி அழிந்து விட்டது.

    மேல் மண் அழிவதற்கு முக்கிய காரணங்கள் ரசாயன உரங்கள், காடுகளை அழிப்பது, வெப்பமயமாதல் ஆகியவை ஆகும். “மேல் மண்ணே உலகத்தின் எல்லா உயிர்க்கும் அடிப்படை. 95% நம் உணவு இதில் விளையும் பயிர்களில் இருந்த வருகிறது” என்கிறார் சமேடோ, உலக உணவு நிறுவனத்தின் டைரக்டர்.

    மண் வளத்தை காப்பாற்ற வேகமாக மனித குலம் ஏதேனும் முயற்சிகள் எடுக்கவேண்டும். 2050இல் உழுவதற்க்கான நிலம் 1960இல் இருந்ததை விட 1/4 அளவே இருக்கும்..

    2016 ஆகஸ்டில் இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவின் 30% நிலம் பாலைவனமாக ஆகும் சாத்தியம் உள்ளதாக கூறியுள்ளது. ராஜஸ்தான் மட்டும் இல்லாமல் ஹரியானா, ஜார்கண்ட், குஜராத், டெல்லி, போன்ற மாநிலங்கள் இவற்றில் அடங்கும். மலை மாநிலங்களும் இவற்றில் அடங்கும்!

    ஏற்கனவே 2014 வெளியான ஆராய்ச்சி அறிக்கையில், இந்தியாவில் 45% நிலம் பலவிதமான பிரச்சனைகளை எதிர் கொள்வது தெரிந்துள்ளது. நீர் தேக்கம், நீர் அரிப்பு, காற்றில் அரிப்பு, உப்பு நிலம், உவர் நிலம், ரசாயன தொழிற்சாலைகள், தோல் பதனிடும் ஆலைகளின் கழிவுகள் என்று பல விதம்.

    மணல் கொள்ளை..

    மணல் கொள்ளையால் ஆறுகள் இருக்கும் மணலை அடித்துக் கொண்டு சென்று அணைகளில் சேர்கின்றன. இதனால் 60% வரை அணைகளின் ஸ்டோரேஜ் குறைகிறது.

    உலகின் இரண்டாவது ஜனத்தொகை கொண்ட நம் நாட்டின் மண் வளம் நேரடியாக உணவு பாதுகாப்புத் தொடர்பு கொண்டது. அதிகம் ரசாயன உரம், பூச்சி கொல்லி பயன் படுத்தலால், மண்ணில் இயற்கை தாதுப்பொருட்கள், மண் புழுக்கள் எல்லாம் குறைந்து விட்டன. தேவைக்கு அதிகமாக உரியா உரம் போட்டு மண் வளம் பாதிக்க பட்டுவிட்டது. நிலத்தடி நீரும் மாசு பட்டு விட்டது.

    நல்ல மண் வளம் இருப்பதால் கிடைக்கும் பயன்கள் – நீரை சேர்ப்பது, கார்பனை சேர்ப்பது, பல உயிரினங்களை வாழ விடுவது போன்றதாகும். மண்வளம் குறைந்து வருவதால் ஒரு மோசமான சூழல் ஆரம்பிக்கிறது. உலகம் மேலும் வெப்பமாகிறது, இதனால் மேலும் நிலம் பாழாகிறது…

    ஒவ்வொரு நிமிடமும் நாம் 30 கால்பந்து மைதானம் அளவான இடம் மண்வளத்தை இழந்து கொண்டு இருக்கிறது, அதற்கு முக்கிய காரணம் ரசாயன விவசாயம் தான் என்பதில் ஐயமில்லை.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....