Friday, March 15, 2024
மேலும்
    Homeவாழ்வியல்சுற்றுலாத்தளங்கள்கல்வராயன் மலைத்தொடரில் காண இத்தனை இடங்களா?

    கல்வராயன் மலைத்தொடரில் காண இத்தனை இடங்களா?

    தமிழகத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக சில சுற்றுலா தலங்கள் வெளியில் அதிக அளவில் பேசாப்பட்டாலும், சில சுற்றுலா தலங்கள் பற்றி பலரும் பேசுவதில்லை என்பதே உண்மை. 

    இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்களை காணும்பொழுது மனம் லேசாக மாறிவிடும். அப்படி வெளியே தெரியாத அதிகம் பேசப்படாத சில சுற்றுலா தலங்கள் உள்ளன. 

    கல்வராயன் மலைத்தொடர்:

    தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு இருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது கல்வராயன் மலைத்தொடர். இயற்கை அழகை இங்கு நின்று பார்த்தல் இனிமையிலும் இனிமை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அருமையான பகுதியாக இந்த கல்வராயன் மலை அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதி 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியது. மேலும் இந்த மலைத்தொடர் கடல் மட்டத்திலிருந்து 1000 அடி முதல் 3800 அடி வரை உயரம் கொண்டது. 

    கல்வராயன் மலை மற்றும் அதன் ஜாகிர்தர்களின் வரலாறு விஜயநகர் ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி கிருஷ்ண தேவராயரின் காலப்பகுதியை சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. கிருஷ்ண தேவராயர் இந்த நிலத்தை அனுபவிக்கும் உரிமைகளை பழங்குடியினருக்கு வழங்கியதாகவும். ஆனால், பல வரிகளை சுமத்தியதாகவும் கூறப்படுகிறது. 

    கல்வராயன் மலைகளில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் காணப்படுகின்றன. நீர்வீழ்ச்சிகள், நீரோடை, ஆறுகள் மற்றும் அருமையான ஜங்கிள் நடை போன்ற இடங்கள் உள்ளன. இந்த இடம் மலையேற்றம் செய்பவர்களுக்கு சொர்க்கமாக அமைந்துள்ளது. 

    இங்குள்ள கீழ்வலசை கிராமத்தில் இருக்கும் மாரியம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியில் பல்வேறு காலத்தைச் சேர்ந்த சிலைகளும் நடுகற்கள் போன்ற சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பலவகைக் கற்களும் காணப்படுகின்றன. இதேபோல மேலும் சில இடங்களில் கற்கால கருவிகளும் காணப்படுகின்றன. 

    தமிழ்நாட்டின் ’ஏழைகளின் மலை பிரதேசம்’ என்றும் இந்த கல்வராயன் மலை அழைக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம், ஒவ்வொரு ஆண்டும் பழங்குடியினர் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக கோடைக்கால விழாவை நடத்தி வருகிறது. 

    நேரம் கிடைத்தால், இயற்கையை கொஞ்ச கல்வராயன் மலைத்தொடருக்கு ஒரு சுற்றுலா சென்று வாருங்கள்.

    ஊருக்குள் கூட்டம் கூட்டமாக சிங்கங்கள்; அச்சத்தில் மக்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....