Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்செல்லப்பிராணிகள்யாரா இருந்தாலும், வம்பிழுத்தா சங்குல தான் கடிக்கும் : பிட்புல் ஒரு சிறப்புபார்வை!

    யாரா இருந்தாலும், வம்பிழுத்தா சங்குல தான் கடிக்கும் : பிட்புல் ஒரு சிறப்புபார்வை!

    நாய்கள் என்றாலே கொஞ்சிக் குலாவி அன்பை வெளிப்படுத்தும் என்ற வாசகம் இருக்கும் இதே பூமியில்தான் நாய்களின் காதலர்களை கூட தொடைநடுங்கச் செய்யும் நாய்களும் உள்ளன. அந்த வகை நாய்களில் முக்கிய இடத்தை பிடிக்கும் நாய்கள்தான் இந்த பிட்புல் வகை நாய்கள். பலநாடுகள் இவற்றின் சீற்றம் அறிந்து தங்கள் நாடுகளில் பிட்புல் வகை நாய்களை தடை செய்ததன் மூலம் இவற்றின் குரூரம் ஓரளவுக்கு உங்களுக்கு விளங்கியிருக்கும். 

    உருவ அளவில் நடுத்தரமாகவும், மெல்லிய உரோமங்களுடனும், கட்டுமஸ்தான உடலமைப்புடன் காணப்படும் இந்த வகை நாய்களின் பூர்விகம் பிரிட்டிஷ் தீவுகள் ஆகும். இவற்றில் ஆண்கள் 18 முதல் 21 இன்ச் உயரமும், பெண்கள் 17 முதல் 20 இன்ச் உயரமும் காணப்படும். எடை 15 முதல் 27 கிலோ என ஆண்களுக்கும், 13 முதல் 22 என பெண்களுக்கும் வேறுபட்டு காணப்படும். இவற்றில் அமெரிக்கன் பிட்புல் டெரியர் வகை நாய்கள் தான் மிகவும் ஆபத்தானவையாக கருதப்படுகின்றன. 

    இவற்றின் வலிமையே நன்கு கட்டமைக்கப்பட்ட உடல், தன்னம்பிக்கை மற்றும் வாழ்வியலுக்கான துடிப்பு ஆகியவற்றில் தான் அடங்கியுள்ளது. எப்பொழுதும் மிகவும் துறுதுறுப்பாக செயல்படும் இவை துடிப்பான நாய் இனம் ஆகும். அதுவே சில சமயங்களில் இவற்றிற்கு பெரும் ஆபத்தாக அமைந்து விடுகிறது. தங்களுக்கு ஆபத்து அல்லது தான் சார்ந்த எஜமானருக்கு ஆபத்து என தெரிந்த சில நிமிடங்களில் தாக்குதலை தொடுத்து விடும். அதனால், நாய்கள் சார்ந்த மரணங்கள் பட்டியலில் இந்த வகை நாய்களுக்கு கணிசமான பங்கு உண்டு. 

    இதனை பற்றி 2000ல் ஆய்வு மேற்கொண்ட நோய்தடுப்பு மற்றும் முன் நடவடிக்கை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. 1979 முதல் 1998 வரையிலான 20 வருட இடைவெளியில் நடந்த 238 நாய்கள் சார்ந்த தாக்குதலில் பெரும்பாலானவை ராட்வீலர் மற்றும் பிட்புல் வகை நாய்களே காரணம் என்று தெரிவித்தன. 

    இவற்றின் வலிமை கருதி பெரும்பாலும் நாய் சார்ந்த விளையாட்டு போட்டிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. யுனைடெட் கென்னல் கிளப்பின் சூப்பர் டாக் பட்டத்தை வென்ற 115 நாய்களில் 34 நாய்கள் அமெரிக்கன் பிட்புல் டெரியர் வகை நாய்கள் ஆகும். மேலும், 13 அமெரிக்கன் ஸ்டேப்போர்ட்சைர் டெரியர் வகை நாய்கள் ஆகும்.

    என்றும் உரிமையாளருக்கு விசுவாசமாகவும், பாதுகாப்புடனும் இருக்கும் இவை தங்களுடைய முன்கோபத்தினால் ஆக்ரோஷமாகி விடுகின்றன. மத்தபடி, இவை ஒரு பாசமான ஒரு குட்டி ராட்சசன்கள் தான். 

    உங்கள் மொழித்திரைப்படங்களை ஏன் இந்தியில் டப் செய்கிறீர்கள்?; காரசாரமாக உருவெடுக்கும் இந்தி பிரச்சனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....