Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ''லசாப்சோ நாய்''.. எதற்கு தெரியுமா?

    சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ”லசாப்சோ நாய்”.. எதற்கு தெரியுமா?

    நாய் ஒன்று 9 குட்டிகளை ஈன்று சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி நாட்டுக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான ஹரிஷ். இவர் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். அந்தவகையில், லசாப்சோ (lhasa apso dog) என்ற இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றை வாங்கி, ‘ஜாய்’ என பெயரிட்டு வளர்த்துள்ளார். 

    இந்த ஜாய் நாய் ஒரே நேரத்தில் 9 குட்டிகளை ஈன்றுள்ளது. ஹரிஷ், செல்லப்பிராணியான ‘ஜாய் லசாப்சோ’ இன நாய்களின் பற்றிய தகவல் அறிய இணையத்தில் தேடிய போது இந்த வகை நாய்கள் 3 முதல் 5 குட்டிகள் மட்டுமே ஈனும் என்ற தகவல் தெரிந்துள்ளது.

    மேலும் அவர், இதுவரை 9 குட்டிகளை ஈன்ற நாய் இந்த இனத்தில் இல்லை என்பதை உறுதி செய்தார். இதையடுத்து இவர், இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ் என்ற சாதனைக்காக விண்ணப்பித்துள்ளார். 

    பல ஆய்வுகளுக்கு பிறகு, ஜாய் 9 குட்டிகள் ஈன்றது சாதனையாக கருதி அவருக்கு இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் பதிவுச் சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

    ஒரு நாய் 9 குட்டிகளை ஈன்று சாதனை படைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....