Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதிருப்பதியில் மூங்கிலால் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களுக்கு நல்ல வரவேற்பு

    திருப்பதியில் மூங்கிலால் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களுக்கு நல்ல வரவேற்பு

    திருப்பதி தேவஸ்தான வளாகத்தில் மூங்கிலால் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களுக்கு பக்தர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

    திருப்பதி மலைக்கு பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பிரசாத லட்டுகள் கொடுக்கப்பட்டு வந்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக சணல் பைகள் மூலம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. 

    பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு பதிலாக ஸ்டீல் பாட்டில்களை அங்குள்ளவர்கள் விற்பனை செய்தனர். மேலும் 300 முதல் 400 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட ஸ்டீல் பாட்டில்களை பல பக்தர்களால் வாங்க முடியாத சூழ்நிலை உருவானது. 

    மேலும் பல புகார்களும் அளிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு மூங்கிலால் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய முடிவெடுத்தனர். 

    அந்த வகையில் ஒடிஷா மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மூங்கில்களை வைத்து குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டன. இந்த மூங்கில் குடிநீர் பாட்டில் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் இந்த மூங்கிலால் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களுக்கு பக்தர்கள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. 

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....