Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபஞ்சாப் மாநிலத்தில் வேலை நேர மாற்றியமைப்பு..

    பஞ்சாப் மாநிலத்தில் வேலை நேர மாற்றியமைப்பு..

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களின் நேரத்தை மாநில அரசு மாற்றி அமைத்துள்ளது.

    பஞ்சாப் மாநிலத்தில் மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அரசு அலுவலகங்களின் நேரத்தை மாநில அரசு மாற்றி அமைத்துள்ளது. 

    அதன்படி, காலை 9 முதல் மாலை 5 மணிவரை செயல்பட்டு வந்த அலுவலகங்கள், இன்றுமுதல் ஜூலை 15 வரை காலை 7.30 முதல் பிற்பகல் 2 மணிவரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதில் முதல் நாளான இன்று காலை 7.30 மணிக்கு முதல்வர் பகவந்த் மான் அலுவலகத்திற்கு வருகை தந்தார். மேலும், பல்வேறு அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் காலை 7.30 மணிக்கு முன்னதாகவே தங்களின் அலுவலகத்திற்கு வந்தனர்.

    இந்த நேர மாற்றத்தின் மூலம் சுமார் 350 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும் என்றும், வெயில் காலத்தில் வெயிலுக்கு முன்னதாகவே மக்கள் தங்களின் பணிகளை அலுவலகங்களில் முடித்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆர்யாவின் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் ரீலிஸானது..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....