Monday, March 18, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்உங்கள் மொழித்திரைப்படங்களை ஏன் இந்தியில் டப் செய்கிறீர்கள்?; காரசாரமாக உருவெடுக்கும் இந்தி பிரச்சனை!

    உங்கள் மொழித்திரைப்படங்களை ஏன் இந்தியில் டப் செய்கிறீர்கள்?; காரசாரமாக உருவெடுக்கும் இந்தி பிரச்சனை!

    இந்தியாவில் பல்வேறு மொழிகள், மதங்கள், கலாச்சாரங்கள், உணவு, உடை, பழக்க வழக்கங்கள் என வேற்றுமையில் ஒற்றுமை என்றே, இன்றளவும் நாம் வாழ்கிறோம். இருப்பினும், இந்தி மொழியை ஆட்சி மொழியாக மாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது, மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இதனை வெளிப்படையாகவே எதிர்த்திருப்பது, அனைவரது பார்வையையும் இந்தி திணிப்பின் பக்கம் திருப்பியுள்ளது. இந்நிலையில், இந்தி நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நடிகர் கிச்சா சுதீப்பும் ட்விட்டரில், இந்தி திணிப்பு பற்றிய கருத்து மோதலில் ஈடுபட்டிருப்பது, திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    கேஜிஎஃப் 2 வெற்றியை அடுத்து இனிமேலும், இந்தி மொழியை தேசிய மொழியென யாரும் சொல்லாதீர்கள் என, நடிகர் கிச்சா சுதீப் கூறினார். இதற்கு, பதிலடி தரும் வகையில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், உங்களைப் பொறுத்த வரையில், இந்தி தேசிய மொழி இல்லை எனில், எதற்காக உங்களுடைய தாய்மொழிப் படங்களை, இந்தி மொழியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள் என கிச்சா சுதீப்பை பின்தொடரந்து ட்விட்டரில் கேள்வி கேட்டுள்ளார். மேலும், எப்போதும் இந்தி மட்டும் தான், அனைவரின் தாய் மொழி என்றும், அதுவே தேசிய மொழி என்றும் இந்தியில் அஜய் தேவ்கன் ட்வீட் செய்தார்.
    இதற்கு பதிலளித்த கிச்சா சுதீப், நான் பேசியதன் பொருள், உங்களுக்கு வேறாக வந்து சேர்ந்திருக்கக் கூடும் என நான் நினைக்கிறேன். நான் நேரில் உங்களை சந்திக்கையில், ஏன் அவ்வாறு சொன்னேன் என்பதனை உங்களுக்கு விளக்கி சொல்வேன். உங்களை காயப்படுத்தும்  நோக்கிலோ, விவாதம் செய்ய வேண்டும் என்றோ, நான் அதைச் சொல்லவில்லை. மேலும், நீங்கள் இந்தியில் எனக்கு அனுப்பியது புரிந்தது. ஏனெனில், நாங்கள் நேசித்து, மதித்து தான் ஹிந்தியை கற்றுக் கொண்டிருக்கிறோம். யாரையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல. ஆனால், இப்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. ஒருவேளை நான் என்னுடைய பதிலை, கன்னட மொழியில் அனுப்பி இருந்தால், அதை எப்படி புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நாங்களும் இந்திய நாட்டில் தானே இருக்கிறோம் சார்? என சுதீப் பதிவிட்டார்.
    நீங்கள் என்னுடைய நண்பர். தவறுதலாக நான் புரிந்துகொண்டதை, தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி. நான் எப்போதும், நமது துறை ஒன்று தான் என்று நினைப்பவன். நாம் அனைவரும், அனைத்து மொழிகளையும் நேசிக்கிறோம். அதே போல அனைவரும், நமது மொழிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என அஜய் தேவ்கன் பதில் கூறினார்.
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....