Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதோனி குறித்து ட்விட் போட்ட ஹர்பஜன்; வைரலான பதிவு!

    தோனி குறித்து ட்விட் போட்ட ஹர்பஜன்; வைரலான பதிவு!

    “இந்த உலகத்தில் தோனியை விட சிறந்தது ஒன்னும் இல்லை” என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், நேற்றைய ஆட்டம் குறித்து ஹர்பஜன் சிங் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “இந்த உலகத்துல ஒன்னைவிட ஒன்னு பெட்டரா தான் இருக்கும். ஆனா எப்பிடி ரூம் போட்டு யோசிச்சு பாத்தாலும் இந்த சென்னை சூப்பர் கிங்ஸ் டீம், அவங்களோட எம்.எஸ்.தோனியைவிட பெட்டரா ஒன்னு இல்லப்பா. கொல்கத்தாவுக்கு காப்பு கட்டுனது தலைவர்னா, ஆப்பு வெச்சது தலதான்.” என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவை சென்னை அணியின் ரசிகர்களும் கிரிக்கெட் ஆர்வலர்களும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். நேற்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 235 ரன்கள் குவித்து இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற பெருமையை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

    யாரா இருந்தாலும், வம்பிழுத்தா சங்குல தான் கடிக்கும் : பிட்புல் ஒரு சிறப்புபார்வை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....