Monday, March 18, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைதமிழர்களின் முக்கிய விளையாட்டான கபடி ஒரு பார்வை!

    தமிழர்களின் முக்கிய விளையாட்டான கபடி ஒரு பார்வை!

    கபடி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. ஏறு தழுவதலுக்கு முன் பயிற்சியாக உடலை வலுவாக்க கபடி பயிற்சி மேற்கொண்டதாக நமது முன்னோர்கள் கூறி உள்ளனர்.

    சடுகுடு என்ற தந்தையிடமிருந்து கபடி என்ற பிள்ளை உருவானது என்றும் காலை பிடி என்றதே மருவி கபடி ஆனது என்றும் நமது முன்னோர்கள் சொல்ல கேள்விபட்டதுண்டு. இது தெற்கு ஆசியா நாடுகளில் பரவலாக விளையாடப்படும் விளையாட்டு ஆகும்.

    கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழ் மக்களால் பல காலமாக, விளையாடப்படும் தமிழர் விளையாட்டுகளுள் ஒன்று.

    ஆடுகளம்:

    கபடி விளையாட்டு என்பது இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி ஆகும். ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர்கள். மொத்த விளையாட்டு நேரம் 40 நிமிடங்கள். இவ்வாட்டம் விளையாட வெறும் நீள்சதுரமான ஆடுகளம் இருந்தால் போதும்.

    இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒரு பக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பார்கள். ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டி செல்லலாகாது. இவ்விளையாட்டுக்கு ஒரு நடுவரும் தேவை.

    படி போட்டிகள் நடத்தும் முறை மற்றும் பொதுவான விதிமுறைகள்:

    இது ஒரு குழு விளையாட்டு, ஒரு போட்டியில் இரண்டு குழுக்கள் இடம்பெறும், ஒரு குழுவிற்கு 12 பேர் விதம் 24 பேர்கள் இடம்பெறுவார்கள், இதில் ஒரு குழுவிற்கு 7 பேர் வீதம் களத்தில் இடம்பிடிப்பார்கள், மீதம் 5 பேர் காத்திருப்பு வீரராக (substitute Player) இடம்பெறுவார்கள்.

    போட்டியானது செயற்கை ஆடுகளம்(Mat) அல்லது மண் மற்றும் மரதூளலால் உருவாக்கபட்ட இயற்கை ஆடுகளத்திலும் நடைபெறும்.

    போட்டியினாது 20- 5- 20 என்ற நேர அளவுகளில் நடத்தபடும்,போட்டி தொடங்கிய பிறகு உத்தியை உருவாக்க கபடி அணிகள் நடுவரிடம் Timeout கோரலாம்( 30 நொடிகள்). முதல் பாதியில் இரண்டு, இரண்டாம் பாதியில் இரண்டு என்ற வீதத்தில் மொத்தம் நான்கு Time Out ஒரு அணிக்கு கிடைக்கும்(Time Out காலம் போட்டியின் நேரத்தில் சேராது,வீரருக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது வேறு யாதவது அசௌகரியம் ஏற்பட்டலோ நடுவர்கள் Official Time Out கொடுப்பார்கள்)

    போட்டியின் தொடக்கத்தை நிர்ணாயிக்க டாஸ் போட படும், டாஸில் வெல்லும் அணி தங்களின் விருப்பமாக ரைடையோ அல்லது சைடையோ தேர்வு செய்யலாம்.

    எதிரணியின் களத்திற்கு” கபடி கபடி “என்று பாடி செல்பவர் ரைடர்(Rider) என்றும், தன் களத்தின் எல்லைக்குள் வரும் வீரரை பிடிப்பவர் டிஃபண்டர்(Defender) என்றும் அழைக்கபடுவார்கள். ஒரு ரைடுக்கான நேர அளவு 30 நொடிகள்.

    கபடி போட்டியில் அதிகமான புள்ளிகள் பாடி தொடும் ரைடர் (Offence) மூலமும், பாடி வரும் வீரரை பிடிப்பதன்(Defence) மூலமும் பெறபடுகிறது.

    ஒரு போட்டிக்கு 5 நடுவர்கள் செயல்படுவார்கள், மைதனாத்திற்கு நடுவில் இருபுறமும் இரு நடுவர்கள் (Main Upier), மைதானத்தின் இருபுறமும் எல்லை பகுதியில் இருவரும் (Scoreer), மைதானத்தை சுற்றி வந்து ஒருவர் வீதம்(Referee) ஐந்து பேர் போட்டியை கண்காணிப்பார்கள்.

    ரைடுகள்:

    ஒரு அணி தொடர்ந்து இரண்டு முறை ரைடில் புள்ளிகளை பெறாமல் திரும்பினால் அடுத்து செல்லும் ரைட் Third Ride எனப்படும், இந்த ரைடில் ரைடர் புள்ளிகளை பெற்ற ஆக வேண்டும், புள்ளிகளை பெற முடியாவிட்டால் எதிரணிக்கு ஒரு புள்ளி செல்லும், ரைடரும் ஆவுட் என்ற முறையில் களத்திலிருந்து வெளியேறுவார்.

    எதிரணியின் களத்தில் ஏழு அல்லது ஆறு வீரர்கள் இருக்கும்போது கபடி பாடி செல்லும் ரைடர் Bonus lineனை தாண்டி தன் கால் தடத்தை பதித்தால் ஒரு வெகுமதி புள்ளி(Bonus) கிடைக்கும்.

    மூன்று நபர் அல்லது அதற்கும் குறைவான பிடி வீரர்கள் இருந்து பாடி செல்லும் வீரரை மடக்கி பிடித்தால், பிடிக்கும் அணிக்கு இரண்டு புள்ளிகள் (Super Tackle) கிடைக்கும்.

    குறிபிட்ட நேரத்திற்குள் அதிகமான புள்ளிகளை பெற்ற அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். போட்டி முடிவின்போது இரு அணிகளும் சம புள்ளியில் இருந்தால் போட்டியானது வெற்றி தோல்வியின்றி டையில் முடியும், லீக் போட்டி என்றால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கும்.

    நாக்அவுட் போட்டி என்றால் டை ப்ரேக் முறை பின்பற்றப்படும். இரு அணிகளுக்கும் சமமாக 5 ரைட் வாய்ப்பு அளிக்கபடும், இதில் எந்த அணி அதிக புள்ளிகளை பெறுகிறதோ அந்த அணி வெற்றி பெறும்.

    போட்டி நேர முடிவில் மற்றும் டை ப்ரேக்கில் இரு அணிகளும் சம புள்ளிகள் பெற்றால் கோல்டன் ரைட் முறை பின்பற்றபடும். பூவா தலையாவில் டாஸ் வெல்லும் அணி Offence அல்லது Defence தேர்வு செய்யும்.  இந்த முறையில் ஒரே ஒரு ரைட் மட்டுமே அனுமதிக்கப்படும். டச்(touch) நிகழ்ந்தால் ரைடர் அணி வெற்றிபெறும், Rider Tackle செய்யபட்டால் Defence அணி வெற்றி பெறும்.

    கோல்டன் ரைடிலும் முடிவு எட்டப்படவில்லை என்றால் எதிரணிக்கு கோல்டன் ரைட் வாய்ப்பு வழங்கப்படும்.

    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டு கபடி. எதிரணிக்கு செல்லும் வீரர் மாட்டைப்போல் கருதப்படுவார். அவ்வீரரை தொடவிடாமல் மடக்கி பிடிப்பது, மாட்டை முட்ட விடாமல் அடக்குவதற்கு சமமாகும்.

    ஒரு அணியில் இருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு நடுக்கோட்டைத் தொட்டுவிட்டு ஒரே மூச்சில் “கபடி கபடி” (அல்லது “சடுகுடு”) என்று விடாமல் கூறிக் கொண்டே எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்கு சென்று எதிர் அணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டுவிட்டு எதிர் அணியினரிடம் பிடிபடாமல் நடுக்கோட்டைத் தாண்டி தம் அணியிடம் திரும்பிவரும் ஒரு வகை விளையாட்டு. தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார்.

    ஆனால் எதிரணியினர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு விடாமல் ‘கபடி கபடி” என்று சொல்லிக்கொண்டே எதிராளியைத் தொட்டுவிட்டு அகப்படாமல் திரும்பிவரவேண்டும், அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பர்.

    மூச்சு விடாமல் ‘கபடிக் கபடி’ என்று சொல்வதற்குப் பாடுதல் என்று பெயர். தம் அணிக்குத் திரும்பும் முன் பாடுவர் பாட்டை நிறுத்தினாலும் ஆட்டம் இழப்பர்.

    ஆண்களுக்கான சடுகுடுவும், பெண்களுக்கான சடுகுடுவும் சற்று வேறுபடும்.

    பிரபல கபடி பாடல் :

    நாந்தான் வீரன்டா
    நல்லமுத்து பேரன்டா
    வெள்ளிச் சிலம்பெடுத்து
    விளையாட வாரன்டா
    தங்கச் சிலம்பெடுத்துத்
    தாலிகட்ட வாரன்டா
    சடுகுடு சடுகுடு சடுகுடு
    சடுகுடு.

    கீத்து கீத்துடா
    கீரைத் தண்டுடா
    நட்டு வச்சன்டா
    பட்டுப் போச்சுடா
    போச்சுடா போச்சுடா…..

    உலகக்கோப்பை கபடி:

    கபடி உலகக்கோப்பை முதன்முதலாக 2004ஆம் ஆண்டில் ஆடப்பட்டது. பின்னர் 2007ஆம் ஆண்டிலும் 2010ஆம் ஆண்டிலும் ஆடப்பட்டன. இதுவரை இந்தியாவே வெல்லப்படாத உலகக்கோப்பை வாகையாளராக இருந்து வருகிறது. இருமுறை இரண்டாவதாக வந்து அடுத்த மிகப்பெரும் வெற்றியை ஈரான் பெற்றுள்ளது. 2010ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் இரண்டாவதாக வந்தது.

    கபடி விளையாட்டை மையப்படுத்தி பல படங்களும் இந்தியாவில் எடுக்கப்பட்டு உள்ளன.

    • ஒக்கடு
    • கபடி கபடி
    • கில்லி
    • வெண்ணிலா கபடிக் குழு
    • பீம்லி கபடி ஜாட்டு
    புரோ கபடி லீக் :

    இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக்கை ஒத்த வடிவமைப்பில் விளையாடப்படும் தொழில்முறை கபடி லீக் போட்டிகளாகும். இதன் முதற் பதிப்பு போட்டிகள் 26 ஜூலை 2014 முதல் விளையாடப்படுகின்றன; இதில் உலகெங்கும் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் பன்னிரெண்டு உரிமம் பெற்ற சங்கங்கள் போட்டியிடுகின்றன. இந்தப் போட்டிகளை தற்சமயம் மசால் இசுபோர்ட்சு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சாரு சர்மா மேற்பார்வையிட்டு வருகிறார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....