Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புசலித்துப்போனதா ஓட்ஸ் கஞ்சி? - அப்போ தோசை சுடுங்க... செய்முறை உள்ளே!

    சலித்துப்போனதா ஓட்ஸ் கஞ்சி? – அப்போ தோசை சுடுங்க… செய்முறை உள்ளே!

    தற்போதைய சூழலில் பலர் ‘மருந்தே உணவு’ என்ற சூழலுக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை வராமல் இருக்க உணவே மருந்து என்ற விதியை நாம் பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றுகையில், உடல் எடை குறைக்கும் பலர் காலையில் ஓட்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். 

    ஆனால், ஓட்ஸை காலையில் சாப்பிடுகையில் ஒருவித சலிப்பு சில நேரங்களில் தொற்றிக்கொள்கிறது என்றும், ஓட்ஸ் கஞ்சி பெரிய சலிப்பை உண்டாக்குவதாகவும் மக்கள் பலர் தெரிவித்தனர்.  அந்த சலிப்பைப் போக்கும் வகையில் ஓட்ஸை கொண்டு தோசை செய்து சாப்பிடுவதென்பது தற்காலத்தில் அதிகளவில் பிரபலமாகி வருகிறது. 

    வெறுமனே ஓட்ஸ் சாப்பிடும்போது நேரும் சலிப்பை ஓட்ஸ் தோசை தவிர்ப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அப்படியான ஓட்ஸ் தோசையை எப்படி செய்வதென இப்பதிவில் பார்ப்போம். 

    தேவையானப் பொருட்கள்:
    • ஓட்ஸ் – 1 கப் அளவு
    • பச்சை பயிர் – 1/4 கப் அளவு
    • இஞ்சி – சின்ன துண்டு (தோல் சீவி நறுக்கியது)
    • பச்சை மிளகாய் – 1
    • மல்லித்தழை – சிறிதளவு
    • உப்பு – தேவையான அளவு
    • சீரகம் – 1/2 ஸ்பூன்
    • தயிர் – 1/4 கப் அளவு
    • தண்ணீர் – 1/2 கப் அளவு
    செய்முறை: 

    ஓட்ஸ், பச்சைப்பயிர் – இரண்டையும் தனித்தனியாக ஏதேனும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். பச்சைப்பயிர் குறைந்தது 6 மணி நேரமும், அதிகமாக 8 மணி நேரமும் ஊற வைக்க வேண்டும். ஓட்ஸ் இரண்டு மணி நேரம் ஊறினால் போதுமானது. பின்பு பச்சைப் பயிர் ஊறவைக்கப்பட்ட தண்ணீரை வெளியே ஊற்றிவிட வேண்டும். 

    இதைத்தொடர்ந்து, இவ்விரண்டையும் மிக்சி ஜாரில் போட்டுக்கொண்டு. எடுத்து வைத்த தேவையானப் பொருட்களை இதனுடன் கலந்து நன்கு அரைக்க வேண்டும். தோசை ஊற்றுவதற்கு ஏற்றவாறு அரைத்தால் போதுமானது. 

    இப்போது ஓட்ஸ் – பச்சைப்பயிர் தோசை மாவு ரெடி. இயல்பாக தோசை செய்வதைப் போல தயார் செய்துக்கொள்ளலாம். இந்தத் தோசைக்கு பூண்டு சட்னி மற்றும் காரச் சட்னி மூடிக்கு ஏற்ற ஜாடி போன்று பொருத்தமாக இருக்கும். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....