Friday, March 15, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புசைவ உணவுகளுக்கு சுவையான அசைவ ஊறுகாய் எப்படி இருக்கும்? 

    சைவ உணவுகளுக்கு சுவையான அசைவ ஊறுகாய் எப்படி இருக்கும்? 

    பெரும்பாலும் நமது வீடுகளில் ஊறுகாய் சைவ வகைகளிலேயே இருக்கும். மாங்காய், பூண்டு, தக்காளி, காய்கறி உள்ளிட்ட வகைகளிலேயே வைத்து இருப்போம். இதற்கு கொஞ்சம் மாறாக மீன் ஊறுகாய் செய்தால் எப்படி இருக்கும்? அசைவம் எடுக்காத நாட்களில் இதை வைத்து சாமாளித்தும் விடலாம். வாருங்கள் எப்படி செய்வது என்று பார்ப்போம். 

    தேவையான பொருள்கள்:

    1. வஞ்சர மீன்- அரை கிலோ 
    2. மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி 
    3. வெந்தையத்தூள்- அரை தேக்கரண்டி 
    4. பெருங்காயத்தூள்- அரை தேக்கரண்டி 
    5. மிளகாய்த்தூள்- இரண்டு மேசைக்கரண்டி 
    6. வினிகர்- 6 மேசைக்கரண்டி 
    7. உப்பு- தேவையான அளவு 
    8. தேங்காய் எண்ணெய்- தேவையான அளவு 
    9. கடுகு- கால் தேக்கரண்டி 
    10. காய்ந்தமிளகாய்- 2 எண்
    11. பச்சை மிளகாய்- 5 எண்  
    12. பூண்டு- 10 பற்கள் 
    13. இஞ்சி- பெரிய துண்டு 
    14. கருவேப்பிலை- சிறிதளவு 
    15. தண்ணீர்- தேவையான அளவு 

    செய்முறை:

    • முள் இல்லாத மீனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 
    • பிறகு அதனுடன் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், வெந்தையத்தூள், பெருங்காயத்தூள், ஒரு மேசைக்கரண்டி மிளகாய்த்தூள் போன்றவற்றை சேர்த்து கலந்துவிட வேண்டும். 
    • மேலும் மீனுடன் வினிகர் ஒரு மேசைக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். 
    • பிறகு ஒரு கடாயில் 7 அல்லது 8 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து காய வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்த உடன், அதில் ஊறவைத்த மீன் துண்டுகளை சேர்த்து பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். 
    • இதன் பின்னர், அதே எண்ணெய்யில் கடுகு, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். பிறகு அதில், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், வெந்தையத்தூள், பெருங்காயத்தூள், ஒரு மேசைக்கரண்டி மிளகாய்த்தூள் போன்றவற்றை சேர்த்து வதக்க வேண்டும். 
    • இறுதியாக 5 மேசைக்கரண்டி வினிகரும் கால் கப் அளவிற்கு தண்ணீரும் தேவையான அளவு உப்பும் சேர்த்து சற்று கொதிக்க வைக்க வேண்டும். பிறகு பொறித்து வைத்த மீன் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு 2 அல்லது 3 நிமிடங்களில் இறக்கிவிடலாம். 
    • அவ்வளவு தான் சுவையான நாக்கில் எச்சில் ஊரும் மீன் ஊறுகாய் தயார். இந்த ஊறுகாயை காற்று புகாத வகையில் கண்ணாடி குடுவையில் அடைத்து வைத்து 1 அல்லது 2 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். 
    • பருப்பு சாதம், ரசம் சாதம் போன்றவற்றுக்கு சிறந்த இணையாக மீன் ஊறுகாயை ருசித்திடுங்கள்…

    சத்து: மீனில் அதிக அளவில் புரத சத்தும், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால் வாரத்திற்கு 2 முறை உணவுமுறையில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம்.  ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதயம் சம்பந்தமான பிரச்சனைகளை குறைக்க வல்லது.

    சாலையில் சென்ற கார் திடீரென எரிந்தது; புதுச்சேரியில் பரபரப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....