Tuesday, May 16, 2023
மேலும்
  Homeவாழ்வியல்ஆரோக்கியம்கோடையில் ஏற்படும் உடல் உபாதைகள் பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்…தவிர்த்துக் கொள்ளுங்கள்!

  கோடையில் ஏற்படும் உடல் உபாதைகள் பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்…தவிர்த்துக் கொள்ளுங்கள்!

  ‘கோடை’ என்றாலே நமக்கு நினைவு வருவது வெயில் தான் இருப்பினும், மாணவ மாணவிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டதும், சொந்த ஊருக்கு செல்வது, நண்பர்களுடன் விளையாடுவது, ஊர்ச் சுற்றுவது போன்ற செயல்களில் ஈடுபாடு காட்டுவது தான் வழக்கம். இப்படி, அதிக நேரம் வெயிலில் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் நோய் குறித்த அபாயங்களை இங்கே பார்க்கலாம். 

  அம்மை நோய்கள்: 

  இந்த வெயில் காலத்தில், அதிக வெப்பத்தால் ஏற்படும் நோய்களாக இந்த அம்மை நோய்கள் காணப்படுகிறது. அதிக நேரம் வெளியில் சுற்றுவதாலும் உடலில் நீர் வறட்சி ஏற்படுவதாலும் இந்த அம்மை நோய்கள் கோடைக்காலத்தில் அதிக அளவு ஏற்படுகின்றன. இதனை வரமால் தடுக்க, முதலில் நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிக நேரம் வெளியே செல்லக் கூடாது. தப்பி தவறி, நோய் வந்துவிட்டால் வேப்பிலை, சின்ன வெங்காயம், மஞ்சள் தான் இதனை குணப்படுத்த சிறந்த மருத்துவ பொருட்கள். 

  மஞ்சள் காமாலை: 

  இந்தக் கோடைக் காலத்தில், அதிக தாகம் ஏற்படும். நாமும் தாகம் எடுக்கிறதே என்பதற்காக சுத்தம் சுகாதரமற்ற நீரினை பருகக் கூடாது. அப்படி பருகுவதின் விளைவால், மஞ்சள் காமாலை நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்க, சுத்தம் சுகாதரமான உணவு பழக்கங்களை கடைபிடித்தல் வேண்டும். இப்படி இருந்தாலே எந்த நோய் தொற்றும் அண்டாது. ஒருவேளை மஞ்சள்காமாலை வந்துவிட்டால், கீழாநெல்லி தான் நமது பாரம்பரியம் இதை சாப்பிடுவதன் மூலம் படிப்படியாக குறைத்துவிடலாம். 

  பொன்னுக்கு வீங்கி: 

  கோடைக் காலத்தில் பரவும் மற்றொரு நோய் இந்த பொன்னுக்கு வீங்கி. இது வைரசால் பரவுக் கூடிய நோய் ஆகும். இந்த நோய் வந்தால், காய்ச்சல், உடம்பு எரிச்சல், சளி, சோர்வு, பசியின்மை, தாடைகளில் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எம்எம்ஆர் எனப்படும் அம்மை நோய்களுக்கு பயன்படுத்தப்படும் நோய் தடுப்பூசியை இந்த நோய்க்கும் பயன்படுத்தலாம். 

  வெப்ப தளர்ச்சி: 

  கோடைக் காலத்தில் உடலில் இருந்து அதிக வியர்வையானது வெளியேறுகிறது. இதன் மூலம் உடம்பில் உள்ள உப்பு சத்துகள் அதிகம் வெளியேற்றப் படுவதால் உடல் சோர்வு ஏற்படுகிறது. இதனை தடுக்க, அதிக அளவு நீராகாரங்களை நாம் அவ்வப்போது எடுத்துக் கொண்டே இருத்தல் அவசியம். 

  வெப்ப மயக்கம்:

  கோடைக் காலங்களில், இந்த பிரச்சனை நமக்கு அதிக அளவில் வந்திருக்கும். உடல் சோர்வினால், மூளைக்கு செல்லக் கூடிய இரத்தத்தின் அளவென்பது குறைந்து விடுகிறது. இதனால் மயக்கம் ஏற்படுகிறது. இதனைத் தடுக்க வெயில் காலங்களில் அதிக அளவு வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும். மேலும், வெப்ப மயக்கம் உண்டானால்,  நன்கு காற்றோட்டமான இடத்திற்கும், குளிர்ந்த தண்ணீரை முகத்தில் அடிக்கவும், குடிக்கவும் கொடுக்க வேண்டும். தண்ணீருடன் உப்பு, எலுமிச்சை சேர்த்தும் கொடுக்கலாம்.  

  வியர்க்குருவால் ஏற்படும் பிரச்சனைகள்: 

  வெயில் காலத்தில், மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பது இந்த வியர்க்குருக்கள் தான். உடம்பில் அதிகம் வியர்வை சுரந்து, இவை தேங்கி இருக்குமிடமெல்லாம் இந்த வியர்க்குருக்கள் தோன்றுகின்றன. வியர்க்குருவால் ஏற்படும் மற்றொரு பிரச்சனை உடம்பின் இடுக்குகளில், ஏற்படும் புண் மற்றும் எரிச்சல். இவற்றைத் தடுக்க, காலை மாலை முறையான குளியல் மற்றும் முகம் கை, கால்கள் கழுவுவது தான். மேலும், நாம் உடுத்தும் உடையும் மிக முக்கியம். அதிக இறுக்கமான வியர்க்கும் ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. 

  அடுத்த மூன்று மாதங்களில் நாம் அடிக்கடி சிக்கப்போகும் வெப்ப அலை குறித்த தகவல்கள் இதோ!

  முகத்தில் ஏற்படும் பிரச்சனைகள்: 

  வெயில் காலங்களில், அதிக வியர்வை வெளியேறுவதால் பருக்கள், கட்டிகள் ஏற்படலாம். அல்லது நாம் உண்ணும் உணவுப் பொருள்கள் சூட்டை கிளப்பும் பொருளாக இருந்தால், இது மாதிரியான பிரச்சனைகள் வர வாய்ப்புகள் அதிகம். அதேபோல், முகக் கருமை போன்ற பிரச்சனைகளுக்கு வீட்டில் கிடைக்கும் இயற்கையான மஞ்சள், கற்றாழை, தக்காளி, சர்க்கரை போன்றவற்றைப் பயன்படுத்தி முகமூடிகளை(மாஸ்க்) செய்து பயன்படுத்தி வரலாம். 

  இந்த கோடைக்காலத்தில் சன்ஸ்கிரீன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ளவேண்டியவைகள் இதோ!

  சிறுநீர் கடுப்பு: 

  வெயில் காலம் என்றாலே, இந்தச் சிறுநீர் கடுப்பு பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம். உடலுக்கு தேவையான தண்ணீர் குறையும் போது, இந்த சிறுநீர் கடுப்பு ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்கும் இடத்தில் எரிச்சல், புண் போன்றவையைத் தடுக்க, அதிகமான தண்ணீர், இளநீர், நுங்கு போன்ற நீராகாரமான உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். 

  சுத்தமும் சுகாதாரமும் ஒரு மனிதனுக்கு மிக அவசியமானவை, அதுவும் இந்த கோடைக் காலங்களில் மிக மிக அவசியம். 

  வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? வாருங்கள் தெரிந்துக் கொள்வோம்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....