Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்அழகுக் குறிப்புகடும் கோடையை சமாளிக்க சருமத்தை இப்படி முறையாக பராமரித்து பாருங்கள்; அசந்துபோவீர்கள்!

    கடும் கோடையை சமாளிக்க சருமத்தை இப்படி முறையாக பராமரித்து பாருங்கள்; அசந்துபோவீர்கள்!

    கோடை என்பது பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடிய விடயமாக தான் தெரிகிறது. அதுவும் சருமத்திற்கு என்றதும் அய்யோ! வியர்வை, எரிச்சல் தான். இப்படியிருக்க, கோடையில் சரும பாதுகாப்பிற்கான முறைகள் என்னென்ன என்பதை இப்பகுதியில் காணலாம்.  

    • வெளியில் செல்லும்போது கட்டாயம், இந்தக் காலத்தில் சன்ஸ்கிரீன் என்பது அவசியம். இது சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து  நமது சருமத்தைப் பாதுகாக்க உதவும். 
    • சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். வியர்வையால் அல்ல! நீங்கள் பயன்படுத்தும் லோஷன் அல்லது தேங்காய் எண்ணெய் கூட போதுமானது தான். 
    • தண்ணீரை அதிகளவு பருக வேண்டும். இது உங்கள் சருமத்தினை வறண்டு போகாமல் பாதுகாக்க உதவும். 
    • அதே போல் குளித்து வந்ததும் ஒரு சிலருக்கு உடம்பு வறண்டு போகும். அதை குறைக்க மாய்ஸ்சரைசர் (moisturizer) பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். உங்களுக்கு எந்த வகை சருமமோ அதற்கேற்ற வகையில் மாய்ஸ்சரைசரை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். 
    • வெயில் தாங்கும் ஆடைகளை அணிவது மிக மிக அவசியமான ஒன்று. பருத்தி ஆடைகளை அணிவதின் மூலம் எரிச்சல், வியர்வை போன்றவற்றை தவிர்க்கலாம். இறுக்கமாக ஆடை அணிவதை தவிர்த்தல் நல்லது. 
    • முகத்திற்கு அதிகமான மேக் அப் போடுவதை தவிர்த்து, குறைந்து அளவில்  மேக் அப் பயன்படுத்தினால் சருமத்தின் பாதுகாப்பு என்பது மேலும் கூடும். 
    • குறைந்தது, காலை மற்றும் மாலை என இரண்டு முறையேனும் குளித்தல் அவசியம். அப்போது சருமத்திற்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். 
    • கோடைக்காலத்தில், நீங்கள் எந்த முக பூச்சுகளையும் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாமல் இருந்தாலும் முகத்தினை, நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறையேனும் கழுவுவது அவசியம். 
    • முகத்திற்கு, சோப்பு அல்லது ஏதேனும் வீட்டில் கிடைக்கும் இயற்கையான பொருள்களை வைத்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் முறையாக தேய்த்து(circular motion) கழுவுவது நல்லது. வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்வது நல்ல பலன்களைத் தரும். மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும் செய்யும். 
    • அதே போல் கால்களையும் கைகளையும் மறந்துவிடக் கூடாது. முறையாக அவற்றையும் பராமரிக்க வேண்டும். 

    கோடையை குளிர்விக்க மட்டுமல்ல! உங்களின் உடலை பார்த்துக்க இதோ வந்து விட்டது!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....