Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்அழகுக் குறிப்புநமது கண்களை பாதுகாக்க எளிமையான 10 வழிகள்

    நமது கண்களை பாதுகாக்க எளிமையான 10 வழிகள்

    நாம் இவ்வுலகத்தை காண மிக அழகான இரண்டு கண்கள் இருக்கிறது. பார்ப்பதை வைத்து நாம் நிறைய நினைவுகளை சேகரித்து வருகிறோம். அப்படிப்பட்ட கண்கள் நமக்கு எவ்வளவு முக்கியமானவை என்று நமக்கு சில சமயங்களில் தெரியாமல் போய்விடுகிறது. 

    குறிப்பாக இந்த நவீன உலகில் ஓயாமல் உழைப்பவர்கள் அதிகமாகி விட்டனர். நேரம் போதவில்லை என்று சொல்லும் அளவிற்கு அப்படி நெருக்கமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். இருப்பினும் நமது உடலுக்கு என சிறிதாவது கவனம் எடுத்தால் மட்டுமே இன்னும் சிறிது நாள் கூட வாழலாம். 

    இப்போதைய இணைய உலகில் கணினிகளும், கைப்பேசிகளும் பிரிக்க முடியாத பங்கினை பெற்று இருக்கின்றன. இதனால் நமது கண்களுக்கு எத்தனையோ பாதிப்புகள் வருகிறது. இதிலிருந்து விடுபட்டு நமது கண்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம். 

    நமது கண்களை பாதுகாக்க எளிமையான 10 வழிகள்:

    சத்தான உணவு அவசியம்: நாள் முழுவதும் உழைக்கும் நமது கண்களுக்காக சத்தான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது. அதேபோல் முக்கியமாக வைட்டமின் நிறைந்த கீரை வகைகளையும் எடுத்துக்கொள்ளலாம். 

    முறையான உடற்பயிற்சி: சற்று நேரம் ஒதுக்கி முறையான உடற்பயிற்சி செய்வதன் மூலம் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை தடுத்து, இவற்றால் வரும் கண் பிரச்சனைகளைக் குறைக்க உதவும். 

    வெயிலில் செல்லும்போது.. நீங்கள் வெயிலில் செல்லும்போது புற ஊதாக்கதிர்களில் இருந்து உங்கள் கண்களைக் காக்க சன் கிளாசஸ் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி செய்வது புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் கண்புரை கார்னியாவில் வீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து காக்க உதவும். 

    டிஜிட்டல் திரை வேண்டாம்: நாம் பயன்படுத்தும் கணினி, கைப்பேசி உள்ளிட்ட டிஜிட்டல் திரைகளை அதிக நேரம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். வேலையில் இருக்கும்பொழுது அவ்வப்போது சற்று இடைவேளை எடுத்துக்கொள்வது அவசியம். இப்படி செய்வது டிஜிட்டல் திரைகளில் இருந்து வரும் நீல ஒளி அலையில் இருந்து கண்களை காக்க உதவும். 

    கண்களை தொடுவதற்கு முன்பு: நாம் நம் கண்களை தொடுவதற்கு முன்பு, கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் நமது கைகளை அவ்வப்போது கழுவிக் கொள்வதன் மூலமாக நோய்த்தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்கலாம். 

    குளிக்கும் முன்பு இது… குளிக்க செல்லும் முன்பும் முகம் கழுவும் முன்பும் கண்ணாடிகளையும் லென்ஸ் அணிந்திருந்தால் அதையும் முறையாக எடுத்து வைத்துவிட வேண்டும். காரணம், அவற்றுடன் குளிக்க செல்வது தேவையற்ற நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். 

    முக்கிய வேலைகளில்.. முக்கியமான வேலைகளுக்கு சாதாரண கண் கண்ணாடிகளை பயன்படுத்தலாம். குறிப்பாக வீட்டில் சில முக்கிய வேலைகளில் ஈடுபடும்பொழுது கண்ணாடிகளை பயன்படுத்தலாம். சமையல், வீட்டுத்தோட்ட பராமரிப்பு போன்ற வேலைகளில் ஈடுபடுகையில் கண்களை பாதுகாத்துக் கொள்ளலாம். 

    கண்களுக்கு வறட்சி வேண்டாம்: கண்களுக்கு வறட்சி ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். அதற்கு சிறிய துணியை எடுத்து, வெது வெதுப்பான நீரில் நனைத்து ஒததடம் கொடுக்க வேண்டும். அப்படி செய்வது வறட்சியில் இருந்து காக்க உதவும். 

    புகைபிடிக்க கூடாது: புகைபிடிப்பது ஆரோக்கியத்திற்கு கேடானது அதே சமயம் இது பார்வை நரம்புகளுக்கு ரத்தம் மற்றும் ஊட்டச்சத்து போன்றவற்றை தடுப்பதால் புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும். 

    கண் பரிசோதனை: இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையேனும் முறையான கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.  

    நாளை வாரிசு டிரெய்லர்; வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....