Tuesday, March 19, 2024
மேலும்
    Homeவாழ்வியல்கோடையை குளிர்விக்க மட்டுமல்ல! உங்களின் உடலை பார்த்துக்க இதோ வந்து விட்டது!

    கோடையை குளிர்விக்க மட்டுமல்ல! உங்களின் உடலை பார்த்துக்க இதோ வந்து விட்டது!

    கோடை வந்தால் போதும் தர்பூசணி இல்லாத வீடு இருக்காது. அப்படி பட்ட தர்பூசணியில் உள்ள சத்துக்கள் என்னவென்று தெரியுமா? வாருங்கள் காண்போம்.

    watermelon benefits

    வயிறு நிறைய,

    தர்பூசணி வெறும் பழம் மட்டுமல்ல அது உணவு உட்கொண்ட திருப்தியை அளிக்கும் ஆற்றல் வல்லது.

    எடையைக் குறைக்க, 

    தர்பூசணியில் கலோரிகள் குறைவாக உள்ளதால் எடைக் குறைக்க மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. எடை குறைய வேண்டும் என எண்ணுபவர்கள் இதை உங்கள் உணவு பட்டியலில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம். காரணம், 90 % நீர்ச்சத்து நிறைந்து உள்ளது.

    சிறுநீர் பாதையை சுத்தம் செய்ய,

    சிறு நீரகத்தைப்  பாதுகாப்புடன் வைத்து கொள்ளவும், உடலில் ஏற்படும் வேதிப் பொருட்களின் நிலையை சமமாக வைத்து கொள்ளவும் உதவுகிறது. 

    முடி வளர,

    அர்ஜினைன் என்ற பொருள் இயற்கையாகவே இதில் அதிகம் உள்ளதால் முடி வளர முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்து உள்ளது.

    கண் பார்வைக்கு,

    பீட்டா கரோடின் இருப்பதால் இது வைட்டமின் ஏ ஆக மாறி கண்னின் தெளிவான  பார்வைக்கு வழிவகைச் செய்கிறது. 

    தோலுக்கு நன்மை,

    வைட்டமின் எ மற்றும் வைட்டமின் சி இருப்பதால் சருமத்திற்கு பொலிவையும் இரத்தச் செல்களை மீண்டும் புதுப்பிப்பதுடன் நீண்ட கால சருமப் பராமரிப்புக்கும் சிறந்ததாக உள்ளது.

    சர்க்கரை நோய்க்கு, watermelon benefits

    சர்க்கரை நோயாளிகள் இதை எப்போதும் உண்ணலாம். காரணம், இதில் அமினோ ஆசிட் என்கிற எல் அர்ஜினைன் மூலப் பொருள் இருப்பதால் இரத்தச் சர்க்கரையின் அளவை சமமாக வைக்க உதவுகிறது.

    புற்று நோய்க்கு,

    இதில் லைகோஃபீன் என்ற வேதிப்பொருள் இருப்பதால் புற்று நோய்க்கு எதிராக செயல் பட வல்லது. இவற்றில் வைட்டமின் எ மற்றும் வைட்டமின் சி உள்ளதால் வாய் மற்றும் நுரையீரல் புற்று நோய்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.

    உடற்பயிற்சியின் போது,

    உடற்பயிற்சியின் போது தசைகளின் பிடிப்பால் அதிக வலி ஏற்படும் அப்போதும் உடலை குளிர்விக்கவும் பயன்படுகிறது.

    ஆண்களின் சக்திக்கு,

    ஃபைட்டோ வைட்டமின் சத்துக்கள் உள்ளதால் உடலை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது மேலும் இதன் மூலப் பொருள்கள் இரத்த நாளங்களை விரிவடைய செய்து, இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது.

    watermelon benefits

    தர்பூசணியில் இத்துனை சத்துக்களா என்று பிரமித்து விட்டீர்களா? கோடை வந்து விட்டது தர்பூசணி வந்திருக்கும், வாங்கி உண்ணுங்கள் பயனைப் பெறுங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....