Sunday, March 17, 2024
மேலும்
    Homeவாழ்வியல்அழகுக் குறிப்புசருமத்தின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் ரோஸ் வாட்டர்!

    சருமத்தின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் ரோஸ் வாட்டர்!

    அழகை அதிகரிக்க ஒவ்வொருவரும் அதிக அளவு அக்கறை எடுத்துக் கொள்வோம். அப்படி அழகை அதிகரிக்கவும், பாதுகாக்கவும் பயன்படும் பொருட்களில் ஒன்று தான் ரோஸ் வாட்டர்.

    உங்கள் சரும அழகை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க பயன்படும் பொருட்களில் ஒன்று ரோஸ் வாட்டர். இது சரும பிரச்சனைகளை தீர்க்கிறது. அதுமட்டுமல்ல, முடியின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இதை முறையாக பயன்படுத்தி வரும்போது சருமத்தில் உள்ள எரிச்சல், அதிகப்படியான எண்ணெய், வறட்சி, கருமை ஆகியவை நீங்கி சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    • தினமும் குளிக்கும்போது தண்ணீரில் சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்து குளித்து வந்தால் சருமத்திற்கு நல்ல பொலிவை கொடுக்கும். வரட்சியான சருமம் உள்ளவர்கள் அந்த ரோஸ் வாட்டர் பயன்படுத்தினால், நல்ல மிருதுவான சருமத்தை பெறலாம்.
    • ரோஸ் வாட்டர் உள்ள பாட்டிலை அரை மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து, பின் அதனை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்களில் உள்ள வீக்கம் குறைந்து, கண்கள் அழகாக மாறும்.
    • ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் அதிகப்படியான எண்ணெயை முகத்தில் இருந்து நீக்க, சருமத்தை அடிக்கடி துடைக்கவோ கழுவவோ வேண்டியிருக்கும். அதற்கும் இந்த ரோஸ்வாட்டர் உதவியாக இருக்கும்.ரோஸ் வாட்டருடன் 2 துண்டு கற்பூரத்தைச் சேர்த்து நன்கு கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு, அவ்வப்போது காட்டனில் தொட்டு முகத்தைத் துடைத்தால் முகத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய் குறையும்.
    • சில பேரது தலைமுடி மிகவும் ரஃபாக இருக்கும். இப்படிப்பட்ட முடியை சாஃப்ட் ஆக மாற்றுவதற்கு, கிளிசரின் 2 ஸ்பூன், ரோஸ் வாட்டர் 2 ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக கலந்து அதன் பின்பு, தலையில் எண்ணெய் வைப்பது போல மயிர்க்கால்களில் படும்படி 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து எப்போதும் போல ஷாம்பு போட்டு தலைக்கு குளித்துக்கொள்ளுங்கள். உங்களுடைய தலைமுடி அதன்பின்பு எப்போதும் சில்கி ஹேர் ஆக மாறிவிடும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த முறையை பின்பற்றலாம்.
    • ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் கிராம்பு தூள், ஒரு ஸ்பூன் ரோஸிவ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தில் பருக்கள் உள்ள இடத்தில தடவ வேண்டும். மறுநாள் காலை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்கள். இவ்வாறு வாரத்திற்கு இரண்டுமுறை செய்துவந்தால் முகத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும்.
    • வெள்ளையாக இருப்பவர்கள், வெயிலில் சென்று வந்தால், சூரிய ஒளியின் காரணமாக சன் டேன் ஏற்படும். இதை நீக்குவதற்கு ஒரு ஸ்பூன் பச்சை பயறு தூள், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து உள்ள பகுதிகளில் போட்டு வந்தால் வெயிலினால் கருத்த இடம், சீக்கிரம் வெண்மையாக மாறிவிடும்.
    • நல்ல வெள்ளையான சருமம் வேண்டுமா, அப்படியெனில் கடலை மாவு அல்லது முல்தானி மெட்டி அல்லது சந்தனப் பொடி, இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
    • இரவில் தூங்கும்போது, எப்போதுமே முகத்தில் மேக்கப் இருக்கக்கூடாது. ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தை நன்றாக சுத்தம் செய்து விட்டு அதன் பின்பு சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு தான் தூங்கவேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

    இயற்கையான முறையில் வீட்டிலேயே ரோஸ் வாட்டர் தயாரிப்பது எப்படி?

    1. ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து வைத்து, அந்த தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று கைப்பிடி அளவுக்கு பன்னீர் ரோஜா இதழ்களைப் போட்டு, அதை மூடி வைத்துவிட வேண்டும்.
    2. நன்கு ஆறியதும் அதைத் திறந்தால் ரோஜா இதழ்களில் இருக்கும் சாறு முழுக்க நீரில் இறங்கி, ரோஸ் வாட்டர் தயாராக இருக்கும்.
    3. பின்னர், இதை வடிகட்டி, அதனுடன் சில துளிகள் பாதாம் ஆயில் மற்றும் வைட்டமின்-ஈ ஆயில் 1 ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். அவ்வளவு தான். ரோஸ் வாட்டர் தயார்.
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....