Sunday, March 17, 2024
மேலும்
    Homeவாழ்வியல்அழகுக் குறிப்புஓ! நகம் வளர்ப்பதில் இவ்வளவு இருக்கிறதா? உங்கள் நகங்களை அழகாக்க அவசியம் இதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்

    ஓ! நகம் வளர்ப்பதில் இவ்வளவு இருக்கிறதா? உங்கள் நகங்களை அழகாக்க அவசியம் இதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்

    பெண்கள் அனைவரும் தங்கள் கைகளில் இருக்கும் நகங்களை அழகுப்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் தருவார்கள். இதனால், அவர்கள் நகங்களை நீளமாக வளர்த்து அதற்கு அழகிய வடிவத்தைக் கொடுத்து, அதன் மேல் நெயில் பாலிஸ் போடுவார்கள்.

    நம் கைகள் மற்றும் கால்களின் விரல்களின் நுனிக்கு நகம் என்பவை கிரீடங்கள்தான். அவை, விரல்களுக்கு அழகோடு பாதுகாப்பையும் தருகின்றன. நம் அன்றாட வாழ்வில் சாதாரண வேலையிலிருந்து நுட்பமான பல வேலைகள் வரை செய்வதற்கு நகங்கள் பெரிதும் உதவுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் பெற்ற நகங்களை அழகாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை இக்கட்டுரையில் காண்போம் வாருங்கள்.

    நகங்கள் எவ்வளவு வளரும்?

    ஒரு நகம் முழுதாக வளர்வதற்கு நான்கிலிருந்து எட்டு மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும். கால் விரல் நகங்களைவிட, கை விரல் நகங்கள் வேகமாக வளரும். நகங்கள் கோடைக் காலத்தில் அதிக அளவில் வளரும்.

    கைவிரலில் ஒரு நகம் மாதத்துக்கு சுமார் மூன்று மில்லி மீட்டரும், கால் விரல் நகம் மாதத்துக்கு ஒரு மில்லி மீட்டர் வரையிலும் வளரும்.

    நகத்தின் வளர்ச்சி குறைய என்ன காரணம்?

    நாம் நோய்வாய்ப்பட்டிருப்பது, சத்துக்குறைபாடு, சில வகை மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுவது, வயதாவது போன்ற காரணங்களால் நகத்தின் வளர்ச்சி குறையலாம்.

    இல்லத்தரசிகளே இதில் கவனம் தேவை:

    • நகத்தின் வேலை எது என்று பார்த்தோமானால், நாம் அதிகமாக பயன்படுத்துகிற விரலின் முனைகளைப் பாதுகாப்பது என்று சொல்லலாம். வேதிப்பொருட்களும், டிடர்ஜென்டுகளும் நகத்தை சேதப்படுத்தக் கூடியவை. எனவே, முடிந்த அளவு அவை, நகத்தின் மீது நேரடியாக படுவதை தவிருங்கள்.
    • வீட்டு வேலைகளைச் செய்யும்போது காட்டன் க்ளவுஸ்களையும், ஈரமான வேலைகள் செய்யும்போது வினைல் அல்லது ரப்பர் க்ளவுஸ்களையும் உபயோகியுங்கள்.
    • நகத்தை வெட்டும் முன் சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு வெட்டுங்கள்.
    • சமையல் வேலை, வீட்டுவேலை, பாத்திரம் கழுவுவது போன்ற வேலை செய்கிறவர்கள் தண்ணீரில் அதிக நேரம் விரல்களைப் புழங்குவார்கள். அப்போது அவர்களுக்கு பூஞ்சைக்கிருமிகள் தொற்றிக்கொள்ள அதிக வாய்ப்பு உண்டாகிறது.
    • இதைத் தடுக்க இவர்கள் வேலை முடிந்ததும் கைகளை கழுவிச் சுத்தமான துணியால் ஈரத்தைத் துடைத்து, விரல்களை  உலர வைத்த பிறகுதான் அடுத்த வேலையில் ஈடுபடவேண்டும்.

    நகம் கடிக்காதீர்கள்..

    • நகம் கடிக்காதீர்கள். அப்படிக் கடித்தால், வாயில் இருக்கும் கிருமிகள் நகத்துக்கும், நகத்தில் இருக்கும் கிருமிகள் வாய்க்கும் சென்றுவிடும்.
    • இதனால், குடல் புழு முதல் டைபாய்டு வரை பல நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

    நெய்ல் பாலிஷுக்கு பதில் இதை செய்யுங்கள்:

    அடிக்கடி பாலிஷ் போட்டுக்கொள்பவர்கள் பாலிஷை அகற்றுவதற்கு பாலிஷ் ரிமூவரை பயன்படுத்துவார்கள். நகப்பாலிஷைவிட பாலிஷ் ரிமூவர்தான் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

    தொடர்ந்து நெயில் பாலிஷை உபயோகப்படுத்திக் கொண்டே இருந்தால் நகத்தின் வளையும் தன்மை கெட்டு, நகம் எளிதில் உடையக்கூடிய Brittle Nail- ஆக மாறிவிடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    • பாதாம் எண்ணெய்யை இரண்டு சொட்டு நகத்தில் தேய்த்து வந்தால், இயற்கை முறையில் ஆரோக்கியமான பலப்பலப்பாக நகம் வளரும்.
    • வெது வெதுப்பாக ஆலிவ் ஆயிலை சூடாக்கி, நகங்களில் வாரம் ஒரு முறை மசாஜ் செய்து வந்தால் நகங்களை உடையாமல் பாதுகாக்கலாம்.
    • தரமான நெய்ல் பாலிஷ்களை மட்டுமே பயன்படுத்துங்கள். நெய்ல் பாலிஷ் ரிமுவரை அடிக்கடி பயன்படுத்துவது நகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். நெய்ல் பாலிஷ் ரிமுவர் உடன் சிறிது கிளிசரின் சேர்த்து உபயோக்கிப்பது நல்லது.
    • நகங்களை வெட்டும் முன் தேங்காய் எண்ணெயை அல்லது வீட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு எண்ணெயைத் தடவி, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், அழகாக விரும்பும் வடிவத்தில் வெட்டலாம்.

    அதிக நீளத்திற்கு ஆசைப்படாதீர்கள்..

    • நகங்களை அதிக நீளத்தில் வளர்க்க ஆசைப்படாதீர்கள். அப்படி, வளர்க்கும்போது அடிக்கடி அதில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    நகத்தில் கறுப்புக்கோடுகள் தெரிகிறதா?

    • நகத்தில் கறுப்புக்கோடுகள் காணப்பட்டால், அது ‘சப்உங்குவல் மெலனோமா’ (Subungual melanoma) என்ற அரிய வகை புற்றுநோயாக இருக்கலாம். இது ஒரு மோசமான புற்றுநோய் வகை. இந்நோய் வந்துவிட்டால், நோயாளியின் ஆயுள்காலம் மிகக் குறைவு.

    நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ள வேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால், கை மற்றும் கால் நகங்களை, சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும் மற்றும் நகம் அழுக்காக இருக்க கூடாது.

    இயற்கை விவசாயத்தில் மகசூலை அதிகரிக்கும் யுக்திகள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....