Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஆப்கானிஸ்தான் தலைநகரில் குண்டு வெடிப்பு - 30-க்கும் மேற்பட்டோர் பலி

    ஆப்கானிஸ்தான் தலைநகரில் குண்டு வெடிப்பு – 30-க்கும் மேற்பட்டோர் பலி

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் உள்ள மசூதியில் குண்டு வெடித்துள்ளது. 

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பிரபல மசூதியில் புதன்கிழமை மாலை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 30-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், படுகாயமடைந்தவர்களை மீட்புப் படையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இதுவரை தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    இந்நிலையில், சமீபகாலமாக ஆப்கானிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று வரும் நிலையில், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....