Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்குறைகிறதா மொபைல் போன் தயாரிப்பு? - வெளிவந்த தகவல்!

    குறைகிறதா மொபைல் போன் தயாரிப்பு? – வெளிவந்த தகவல்!

    மொபைல் போன் தயாரிப்பு, ஆண்டுதோறும் 20 சதவீதம் அளவிற்கு சரிவடைந்து வருவதாக, தொழில்நுட்ப சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கவுண்டர்பாயின்ட் தெரிவித்துள்ளது.

    தொழில்நுட்ப சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கவுண்டர்பாயின்ட் இந்திய நாட்டில் மொபைல் போன் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. 

    அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் மொபைல் போன் விற்பனை 30 சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளது. நடப்பாண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 18 சதவீதம் குறைந்துள்ளது.

    ஆண்டுதோறும் மொபைல்போன் தயாரிப்பு 20 சதவீதம் அளவிற்கு குறைந்து வருவதுடன். பெரும்பாலான நிறுவனங்கள், தாங்கள் தயாரித்த மொபைல் போன்களை விற்க முடியாத நிலையில் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், மொபைல் போன் தயாரிப்பு சரிவுக்கு, கடந்த ஆறு மாதங்களாக மொபைல் போன் விற்பனையில் ஏற்பட்ட சுணக்கமே காரணம் என கூறப்பட்டு வருகிறது. இந்த பாதிப்பானது உலகம் முழுவதும் நிலவுவதாகவும், இன்னும் சில காலங்களுக்கு தொடறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அயலான் பட ஏலியனுக்காக இத்தனை கோடி செலவா? – படக்குழு வெளியிட்ட தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....