Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஒரே நபர் பல பெயர்களில் விந்தணு தானம்... கண்டுபிடித்த தம்பதியினர்கள்

    ஒரே நபர் பல பெயர்களில் விந்தணு தானம்… கண்டுபிடித்த தம்பதியினர்கள்

    ஒரே நபர் பல்வேறு பெயர்களில் ஏமாற்றி விந்தணு தானம் செய்த அதிர்ச்சி சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுள்ளது. 

    உலகம் முழுவதும் குழந்தையின்மை பிரச்சினை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணமாக, வாழ்வியல் முறையும், உணவு பழக்கவழங்களும் காரணமாகக் கூறப்படுகிறது. குழந்தையின்மை பிரச்சினையை தீர்க்கும் வகையில் மருத்துவ சிகிச்சைகளும் நடைமுறையில் உள்ளன. 

    அவற்றில் முக்கியமானதாக, விந்தனுக்கள் தானம் முறை உலகளவில் முக்கியமானதாக கருதப்படுகிறது. பல நாடுகளில் இந்த சிகிச்சை முறை நடைமுறையில் உள்ளது. அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் விந்தணு தானம் மூலம் குழந்தை பெறுவதும் அங்கு வழக்கமாக உள்ளது. ஆஸ்திரேலியா சட்டப்படி விந்தணுக்களுக்குப் பணம் செலுத்துவதும் பரிசுகளை வழங்குவதும் சட்டவிரோதமானது. இதுதொடர்பான எந்த குற்றத்திற்கும் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். 

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர், அங்குள்ள சட்டங்களை ஏமாற்றி போலி பெயர்களில் சுமார் 60-க்கும் மேற்பட்டோருக்கு விந்தணுக்களை தானம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

    விந்தணு தானம் பெற்றவர்களில் சிலர் நிகழ்ச்சி ஒன்றில் கூடியுள்ளனர். அப்போது, அவர்களின் குழந்தைகள் எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் கருத்தரிப்பு மையத்துக்கு நேரில் சென்று விசாரித்துள்ளனர். 

    அப்போதுதான், ஒரே நபர் பல்வேறு பெயர்களில் ஏமாற்றி விந்தணு தானம் செய்தது தெரியவந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குற்றம் உறுதியானபோதும், குற்றவாளியின் பெயர் பற்றிய விவரம் ஏதும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    ‘ஆஸ்திரேலிய அணிக்கு தெளிவில்லை’ – ஹர்பஜன் சிங் விமர்சனம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....