Sunday, March 17, 2024
மேலும்
    Homeவாழ்வியல்அழகுக் குறிப்புமிருதுவான சருமத்திற்கு இதை செய்தாலே போதும்..

    மிருதுவான சருமத்திற்கு இதை செய்தாலே போதும்..

    பொதுவாக இப்போதைய காலக்கட்டத்தில் பெண்களும் சரி ஆண்களும் சரி சரிவர சருமத்தை பாதுகாக்க நேரமின்மையால் ஓடிக்கொண்டிருக்கின்றனர். குறைந்தது வாரத்திற்கு இரண்டு அல்லது ஒருமுறையேனும் சருமத்திற்கு என சிறிது நேரம் ஒதுக்குவது அவசியம். அதற்கான சில எளிய வழிமுறைகளை இங்கே காணலாம்…

    • தக்காளி சாற்றில் சிறிது ரவையைக் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும். இப்படி செய்வது முகத்தை மிருதுவாகவும் பளபளப்பாக மாற உதவும். 
    • சிறிது கசகசா மற்றும் வெந்தயத்தை பாலில் ஊற வைத்து ஓரளவு கரகரப்பாக அரைத்து முகத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் மென்மையாக மாறும். 
    • வாழைப்பழத்தை மசித்து முகம் மற்றும் கழுத்தில் வாரம் ஒருமுறை தடவி வர முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் போன்றவை மெல்ல மறையும். வேறு ஏதேனும் சரும பிரச்சனைகள் இருப்பின், வாழைப்பழத்துடன் சிறிது தேன் சேர்த்து பயன்படுத்தலாம். 
    • சிறிது படிகாரத் தூளும், பாதாம் எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து குழைத்து முகத்திலும் உடலிலும் தடவி மாதம் ஒருமுறை குளித்து வந்தால் மிருதுவான சருமத்தை மெல்லப் பெறலாம். 
    • வாரம் ஒருமுறையேனும் கடுகு எண்ணையை உடலில் பூசி பிறகு, கடலை மாவு அல்லது நீங்கள் பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்தி வர சருமம் மென்மையாகும். 
    • கேரட்டத்தை துருவி அவிக்க வேண்டும். பின்பு அதை வெளியே எடுத்து சருமத்தில் பூசி குளித்து வர வழுவழுப்பான மென்மையான சருமத்தைப் பெறலாம்.  
    • வெயிலில் சென்று வந்தவுடன் சருமத்தின் நிறமும் தோற்றமும் மாறுபடும். இதைத் தவிர்க்க வெளியே சென்று வந்ததும் தக்காளி அல்லது வெள்ளரிக்காய் போன்ற சாறை முகத்தில் தேய்த்து வர முகம் பொலிவு பெரும். 
    • அதேபோல் நீங்கள் இருக்கும் அறையை சற்று ஈரப்பதம் நிலவுவதாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்வது சருமம் சீக்கிரத்தில் உலர்ந்து விடாமல் இருக்க உதவும். 

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் ரகசிய ஆவணங்களா? – எஃப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....