Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமான்செஸ்டர் அணியை மீண்டும் காப்பாற்றினார் ரொனால்டோ : செல்சியாவின் அபார ஆட்டம்

    மான்செஸ்டர் அணியை மீண்டும் காப்பாற்றினார் ரொனால்டோ : செல்சியாவின் அபார ஆட்டம்

    செல்சியா அணியுடனான ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-1 என சமன் செய்தது. அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். 

    செல்சியா மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிகளுக்கு இடையேயான பிரிமியர் லீக் ஆட்டமானது, இங்கிலாந்தில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மான்செஸ்டர் யுனைடெட் அணி தனது கடைசி ஆட்டத்தில் லிவர்பூல் அணியிடம் 0-4 என்ற கோல்கணக்கில் பரிதாபமாக தோற்று இருந்தது. 

    அந்த ஆட்டத்தில் தன் குழந்தையின் மரணம் காரணமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடவில்லை. அந்த துயர சம்பவத்திற்கு பிறகு இந்த ஆட்டத்தில் தான் அவர் முதல் முறையாக களமிறங்கினார். இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்ட இந்த ஆட்டத்தில் செல்சியா அணியின் ஆட்டமே ஓங்கியிருந்தது. 

    பெரும்பாலும் பந்து செல்சியா அணியினரின் கால்களுக்கு இடையே தான் சுத்திக்கொண்டிருந்தது. எவ்வளவோ முயன்றும் மான்செஸ்டர் அணியினரால் ஆட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை. மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் அந்த அணியின் அணியின் கோல்கீப்பர் டேவிட் டி கியாவுக்கு தான் நன்றி கூற வேண்டும். கியாவால் மட்டும் கிட்டத்தட்ட பல கோல் நோக்கிய தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 

    முதல் பாதி கோல் இன்றி முடிந்தாலும், இரண்டாவது பாதியின் 60வது நிமிடத்தில் செல்சியா அணியின் மார்க்கோ அலோன்சோ முதல் கொலை அடித்தார். ஆனால், 62வது நிமிடத்திலேயே கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு முதல் கோலை அடித்து 1-1 என சமன் செய்தார். 

    அந்த கோல் மட்டும் இல்லை என்றால் மான்செஸ்டர் அணியின் நிலைமை மேலும் பரிதாபமாகி இருக்கும். இதன்மூலம் மான்செஸ்டர் அணி மேலும் தன்னுடைய வலுவற்ற நிலையை நேற்று வெளிப்படுத்தியுள்ளது. இதனை சரிசெய்யாவிட்டால் இனிவரும் போட்டிகள் மேலும் கடினமாகி விட அதிக வாய்ப்புள்ளது.

    பந்துவீச்சால் பஞ்சாப்பை திணறடித்த லக்னோ, புள்ளிப்பட்டியிலில் ஏற்பட்ட மாற்றம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....