Tuesday, May 16, 2023
மேலும்
  Homeஆன்மிகம்ராம நாமம் உச்சரித்தால்.., வளையல் அணியாமல் இருந்தால்.., பாகற்காய் சமைத்தால்.. என்னவாகும் - பதில்கள் உள்ளே!

  ராம நாமம் உச்சரித்தால்.., வளையல் அணியாமல் இருந்தால்.., பாகற்காய் சமைத்தால்.. என்னவாகும் – பதில்கள் உள்ளே!

  ஒவ்வொரு பெண்ணும் ஆன்மிகத்தினைப் பற்றி தெரிந்து கொள்வது நல்ல பழக்கம் ஆகும். ஆன்மீகம் மனதினை அமைதிப்படுத்தவும், இறை சிந்தனையை அதிகமாக்கவும் உதவுகிறது. இறைவனை பூஜிப்பதால் நன்மைகள் கோடி. ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ளக்கூடிய ஆன்மீக தகவல்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

  • ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதேப்போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
  • காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றைப் பார்க்கவேண்டும். தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
  • எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும். ஊறுகாய் குபேரருக்கு பிடித்த உணவாகும்.
  • எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
  •  வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
  • எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பெண்கள் தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
  • எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது. சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதை மறவாதீர்கள்.
  • பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது. அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும். இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
  •  தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
  •  வெள்ளிக்கிழமைகளில், விஷேச நாட்களில் (பண்டிகை நாட்களில்) பாகற்காயை சமைக்க கூடாது. அவ்வாறு செய்வதால் பாவம் வந்து சேரும். சூரியன் உதயத்திற்கு முன்பு எழும் பெண்கள் எப்பொழுதும் வாழ்வில் வெற்றிப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

  இப்படித்தான் இருக்கப்போகிறதா இன்றைய நாள்? – மேஷம் முதல் கன்னி வரையிலான ராசி பலன்கள்!

  இப்படித்தான் இருக்கப்போகிறதா இன்றைய நாள்? – துலாம் முதல் மீனம் வரையிலான ராசி பலன்கள்!

  சிவபெருமானை வீட்டில் வழிபட இப்படியெல்லாம் செய்யுங்கள்; பலன்கள் குவியும்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....