Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்இப்படித்தான் இருக்கப்போகிறதா இன்றைய நாள்? – துலாம் முதல் மீனம் வரையிலான ராசி பலன்கள்!

    இப்படித்தான் இருக்கப்போகிறதா இன்றைய நாள்? – துலாம் முதல் மீனம் வரையிலான ராசி பலன்கள்!

    துலாம்:

    முக்கியமான முடிவுகள் எடுக்க விரும்பினால் இன்று உகந்த நாள். இன்று புத்துணர்ச்சியோடு சிறப்பாக இருப்பீர்கள்.

    புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் அதிர்ஷ்டம் உண்டு. உங்கள் துணையிடம் உங்கள் உணர்வுகளை உற்சாகத்துடன் வெளிப்படுத்துவீர்கள். பணத்தைப் பொருத்தவரை திருப்திகரமான நிலை இருக்கும். இன்று ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

    விருச்சிகம்:

    இன்று மிகவும் சிறப்பான நாள். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் தன்னம்பிக்கை வெற்றியை அளிக்கும்.

    இன்று பணிகள் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும். உங்கள் துணையிடம் நீங்கள் நேர்மையான அணுகுமுறை கொண்டிருப்பீர்கள். இன்று உங்களிடம் அதிக பணம் காணப்படும். இன்று நீங்கள் மகிழ்ச்சியான மன நிலையில் இருப்பீர்கள்.

    தனுசு:

    நீங்கள் எந்த விஷயத்தையும் சகஜமாக அணுக வேண்டும். பதட்டப் படுவதை தவிர்க்க வேண்டும். மனது ஒருமித்து சரியான நேரத்தில் பணிகளை ஆற்றினால் சிறப்பாக இருக்கும். உங்கள் பிரியமானவரின் கருத்திற்கு மரியாதை கொடுங்கள்.

    இன்று அதிக பண வரவு இருக்காது உங்களிடம் இருக்கும் பணத்தில் கவனமாகவும் பயனுள்ள விஷயங்களுக்காகவும் செலவு செய்ய வேண்டும். உணவு முறையில் கவனம் செலுத்தவும்.

    மகரம்:

    இன்றைய நாள் முழு அளவு சாதகத்தை அளிக்காது. தியானம் மேற்கொண்டு அமைதியாக இருப்பதன் மூலம் குழப்பங்களைத் தீர்க்க முடியும்.

    பணிகள் அதிகமாக காணப்படும். திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் நட்பு முறையில் விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இன்று நிதியை சிறப்பாக நிர்வகியுங்கள்.

    இன்று ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும். இவ்வாறு செய்வதால் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

    கும்பம்:

    இன்று தைரியமாகவும் உறுதியாகவும் இருப்பது உங்களுக்கு சாதகமாக இருக்கும், பணியிடத்தில் சக பணியாளர்களிடம் நட்புடன் இருக்க வேண்டும். திறமையாகப் பணியாற்றி அனைவரிடத்திலும் நற்பெயரைப் பெறுவீர்கள்.

    உங்கள் துணையிடம் அன்பான நட்பான அணுகுமுறை தேவை. இன்று பணம் அதிக அளவில் காணப்படும். உங்கள் சேமிப்பு உயரும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள்.

    மீனம்:

    உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். உங்கள் திறமையை நீங்கள் உணரும் நாள். கடினமான பணிகளையும் இன்று எளிதாக முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் பயனுள்ள சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். இன்று அதிக பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.

    இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தியானம் அல்லது யோகா மேற்கொள்வது நல்லது.

    இப்படித்தான் இருக்கப்போகிறதா இன்றைய நாள்? – மேஷம் முதல் கன்னி வரையிலான ராசி பலன்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....