Saturday, March 16, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    துலாம்: 

    துலாம் ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு ஓரளவு நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. இந்த வார பிற்பகுதியில் அதிக அளவு நடைபெறும். முற்பகுதியில் தேவையற்ற சில பிரச்சனைகள் தோன்றி மறையும். திருமண காரியங்கள் கைக்கூடி வரும். வாழ்க்கைத்துணையுடன் சற்று பொறுமையுடன் நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்களுக்கான ஆதரவு கிடைக்கும். தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். இதன் காரணமாக லாபம் அதிகரிக்கும். 

    விருச்சிகம்: 

    விருச்சிக ராசிக்காரர்களே இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சகோதரர்கள் உங்களிடம் உதவி கேட்பார்கள். சிலருக்கு ஆடை ஆபரணம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைதுணை வழியே நன்மைகள் வந்து சேரும். அலுவலகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. தொழிலில் இப்போதைக்கு புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இருப்பினும் எப்போதும் போல் லாபம் அதிகரித்து காணப்படும். 

    தனுசு: 

    தனுசு ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு ஓரளவு நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. நண்பர்களின் சந்திப்பு உங்களுக்கு மகிழ்ச்சி தரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சில நேரங்களில் மனதில் தேவையற்ற சலனம் உண்டாகலாம். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தந்தையிடம் இருந்து எதிர்ப்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். தொழிலில் எப்போதும் உள்ள சூழ்நிலையே நீடிக்கும். 

    மகரம்: 

    மகர ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு ஓரளவு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வாழ்க்கைத்துணை உதவியுடன் உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமுடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் கடுமையாக உழைத்தாலும் அதற்கான பெயர் கிடைக்காது. இருப்பினும் உங்கள் முயற்சிகளை கைவிட வேண்டாம். தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் சற்று சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். 

    கும்பம்: 

    கும்ப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதார நிலை சீராகக் காணப்படும். கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். நண்பர்கள் உதவி உங்களுக்கு கைகொடுக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழிலில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். 

    மீனம்: 

    மீன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் சுமாரான நாட்களாக காணப்படுகின்றன. குடும்பத்தில் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். பொருளாதார சூழ்நிலை சீராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலக பணிகளில் ஆதரவு கிடைக்கும். தொழிலில் ஓரளவு லாபம் கிடைக்கும். சிலருடன் கருத்துவேறுபாடுகள் தோன்றும் என்பதால் பொறுமை அவசியம். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....