Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைராஜபக்சே குடும்பம்தான் குறியா? - இலங்கையில் நாளுக்கு நாள் தீவிரமடையும் போராட்டம்!

    ராஜபக்சே குடும்பம்தான் குறியா? – இலங்கையில் நாளுக்கு நாள் தீவிரமடையும் போராட்டம்!

    அண்டை நாடான இலங்கையில், பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக அசாதாரண சூழல் நிலவுகிறது. மக்கள் வீதியில் வந்து போராடி வந்த நிலையில், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவை பதவி விலகுமாறு போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

    இதனையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகினார் மகிந்த ராஜபக்சே. பிறகு, நேற்றைய தினத்தில் மகிந்த ராஜபக்சேவின் வீட்டை எரித்தனர் போராட்டக்காரர்கள். பொருளாதார நெருக்கடியால், இலங்கையே பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ராஜபக்சேவின் தந்தை டி.ஏ.ராஜபக்சேவின் சிலையை, போராட்டக்காரர்கள் உடைத்திருப்பது, தற்போது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கையன் அதிபரான கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ஆகியோரின் தந்தையான டி.ஏ. ராஜபக்சேவின் சிலையை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியுள்ள சம்பவம், இலங்கையில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதாரப் பிரச்சனையால், அங்கு நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகிய இருவரும் பதவியில் இருந்து விலகுமாறு கோஷமிட்ட மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மே 9, இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள போராட்ட களத்தில் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் புகுந்தனர்.

    மிகவும் அமைதியான முறையில் மக்கள் போராடி வந்தனர். ஆனால் மக்கள் மீது, ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்தத் தகவல் மக்கள் மத்தியில் பரவ, அனைவரும் ஆத்திரம் அடைந்தனர். இதனையடுத்து, இலங்கை முழுவதும் காட்டுத்தீ போல கலவரம் வெடித்தது.

    இலங்கை முழுவதும் ஏற்பட்ட கலவரங்களில், ஆளுங்கட்சியின் எம்.பி., அமரகீர்த்தி உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். இலங்கையில் நிலைமை கைமீறிப் போனதைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.

    இலங்கையின் அம்பந்தோட்டையில் மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் பூர்வீக வீடு உள்ளது. இவர்களின் பூர்வீக வீட்டுக்கு, மக்கள் தீ வைத்து எரித்தனர். மேலும், தங்காலையில் இருக்கும் ராஜபக்சே சகோதர்களின் தந்தையான டி.ஏ. ராஜபக்சே சிலையை போராட்டக்காரர்கள் அடித்து உடைத்து நொறுக்கியுள்ளனர்.

    பீட்ருட்ட கிள்ளிப் பார்த்து வாங்கனும்; கேரட்ட கீறிப் பார்த்து வாங்கனும்; மாம்பழத்த…..?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....