Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கைக்கு உதவிய இந்தியா; நன்றி தெரிவித்த அமைச்சர்..

    இலங்கைக்கு உதவிய இந்தியா; நன்றி தெரிவித்த அமைச்சர்..

    இலங்கையில் காவல் துறை ரோந்து பணிகளுக்காக, இந்தியா 125 வாகனங்களை வழங்கி உதவியுள்ளது.

    இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி என்பது உலகறிந்த விடயம். பல்வேறு நாடுகள் இலங்கைக்கு தொடர்ந்து உதவிய வண்ணம் உள்ளன. அந்நாட்டில் பல்வேறு அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தன. 

    இந்நிலையில், இலங்கையில் காவல் துறை ரோந்து பணிகளுக்கு உதவும் வகையில் 500 வாகனங்களை வழங்க இந்தியா முடிவு செய்தது. அதன்படி, தற்போது இந்தியா 125 வாகனங்களை வழங்கி உதவியுள்ளது.

    இதைத்தொடர்ந்து, இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

    இந்தியா சார்பாக தூதர் கோபால் பாக்ளே இலங்கை பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் திரண் அலஸ்ஸிடம் காவல் துறை ரோந்து பயன்பாட்டுக்காக 125 வாகனங்களை ஒப்படைத்தார். இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு எப்போதும் தொடரும். 

    மேலும், உறுதி அளிக்கப்பட்ட 500 வாகனங்களில் மீதமுள்ள 375 வாகனங்களும் விரைவில் ஒப்படைக்கப்படும். 

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, இலங்கை பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் திரண், ‘கடந்த மூன்று ஆண்டுகளில் ரோந்து பணிகளுக்காகப் போதிய வாகன வசதியின்றி இலங்கை காவல்துறை பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டனர். இந்தச் சூழலில் உதவிய இந்திய அரசுக்கு நன்றி’ என்று தெரிவித்தார். 

    நடிகர் மாயி சுந்தர் காலமானார்; திரையுலகினர் இரங்கல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....