Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கையில் தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட அரிசி மூட்டைகள் பதுக்கல்

    இலங்கையில் தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட அரிசி மூட்டைகள் பதுக்கல்

    இலங்கை வவுனியா பகுதியில் தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். மக்களை விலைவாசி உயர்வு வாட்டி வதைத்து வருகிறது. அரசியலிலும் பெரும் குழப்பமான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு சில மாதங்களுக்கு முன்பு, தமிழக அரசு சார்பில், உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருக்கும் இலங்கைத் தமிழர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் இந்த உதவிப்பொருட்கள்  அனுப்பி வைக்கப்பட்டன. 

    இந்நிலையில், இலங்கை வவுனியா பகுதியில், மதுரங்கர் கிராமத்தின் கிராம சங்க கட்டிடத்தில் தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதனை அப்பகுதி கிராம மக்கள் கண்டுபிடித்தனர். 

    அப்படி கண்டுபிடிக்கப்பட்ட அரசி மூட்டைகள், வண்டுகள் ஏறி எதற்கும் தவாத நிலையில் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.  

    அடையாறு பஸ் டிப்போ, வணிக வளாகமா மாறுகிறதா? – மெட்ரோ அளித்த பதில்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....