Tuesday, May 16, 2023
மேலும்
  Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நெஞ்சுக்கு நீதி பட விழாவில், சிவகார்த்திகேயன் பேச்சைக் கேட்டு கண்கலங்கிய அருண் ராஜா!

  நெஞ்சுக்கு நீதி பட விழாவில், சிவகார்த்திகேயன் பேச்சைக் கேட்டு கண்கலங்கிய அருண் ராஜா!

  அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் நெஞ்சுக்கு நீதி. திப்பு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். நடிகை தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி, இளவரசு மற்றும் மயில்சாமி ஆகியோர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

  வருகின்ற மே மாதம் 20 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வரவிருக்கிறது. சென்னையில் நேற்று, இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார்.

  சிவகார்த்திகேயன்:

  அப்போது, உதய் சார் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து என்னுடனே பேசி வருகிறார். ஒவ்வொரு முறை காணும் போதும் ஆசையாகவும், பண்பாகவும் பேசுவார்.

  உங்களோட உழைப்பு எந்த அளவிற்கு உண்டானது என்று அனைவருக்கும் தெரியும். நான் சினிமாத் துறையில், இரண்டு அல்லது மூன்று வேலைகளை செய்வதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. ஆனால், நீங்கள் இரண்டையும் சமன் செய்து, மேலும் பல வேலைகளை செய்வதைப் காணும்போது ஆச்சரியமாக உள்ளது. இதனை உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று சிவகார்த்திகேயன் பேசினார்.

  “நான் நடித்த டான் பட விழாவில் விளையாட்டாக, நான் தான் டான் என்று சொல்லிவிட்டார் உதயநிதி. எல்லோரும் அது பற்றி என்னிடம் கேட்டார்கள். எனக்கே ஒரு கருப்பு நிற கார் வாங்கி, கண்ணாடி போட்டு டான் மாதிரி மாற வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. உண்மையாகவே, உதயநிதி சார் தான் டான்” என்றும் சிவகார்த்திகேயன் கூறினார்.

  சக்திவாய்ந்த தலைப்பைத் தான் இப்படத்திற்கு வைத்துள்ளனர். கேஜிஎப் பட ஸ்டைலில் சொல்வதென்றால் “Powerful Peoples Makes powerful Films” என்று தான் சொல்ல வேண்டும் என்வும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

  மேலும், அவர் பேசுகையில்,இயக்குநர் அருண் ராஜா இந்தப் படத்தின் கதையை எனக்கு சொல்லும் போது மிகவும் ஆர்வமாக இருந்தது. பொதுவாகவே எனக்கு, ரீமேக் படங்கள் என்றால் சற்று தயக்கமாகத் தான் இருக்கும். ஆனால், அருண் ராஜா காமராஜ் இப்படத்தை மிகவும் நேர்த்தியாக ரீமேக் செய்துள்ளார்.

  ட்ரைலர் மற்றும் டீசரைப் பார்க்கும் போதே இது நல்ல படம் என்று எனக்குத் தெரிந்து விட்டது. திரைப்படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பது, படம் வெளிவரும் அன்றைக்குத் அன்று தான் தெரியும். அருண்ராஜா எனது நண்பர் என மகிழ்ச்சியாக கூறுவேன். அவர் ஒவ்வொரு படத்திலும் வளர்ந்து கொண்டே இருக்கிறார்.

  இயக்குநர் அருண் ராஜா, எனக்கும் ஒரு நல்ல கதையை சொல்ல வேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன். கனா திரைப்படத்தில் வெறும் 15 நாட்கள் மட்டுமே வேலை செய்தேன். எனக்காக ஒரு நல்ல படத்தை இயக்க வேண்டும் என்று மேடையில் கேட்டுக் கொள்கிறேன்.

  நாங்கள் கல்லூரியில் படிக்கும்போது, அருண் ராஜா ஒருபோதும் சீரியசாக பேசமாட்டார். ஆனால் கனா மற்றும் நெஞ்சுக்கு நீதி படங்களை காணும் போது அவரின் வளர்ச்சி என்னை ஆச்சரியப்பட வைத்து விட்டது.

  “உன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய விஷயத்தை இழந்திருக்கிறாய் என்று தெரியும். இனி உனக்கு கிடைக்கும் ஒவ்வொரு பாராட்டுகள் மற்றும் கைதட்டல்கள் அனைத்திலும் சிந்து (அருண்ராஜாவின் மனைவி) உன்னுடன் இருந்து கொண்டே இருப்பார், எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது ” என்று சிவகார்த்திகேயன் பேசினார். நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதைக் கேட்டு இயக்குநர் அருண் ராஜா காமாராஜ் கண்கலங்கி நின்றார்.

  பற்றி எறிந்த ராஜபக்சேவின் வீடு, பதற்றத்தின் உச்சத்தில் இலங்கை!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....