Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்கடும் வீழ்ச்சியில் ரூபாய் மதிப்பு: பிரதமரை கலாய்க்கும் விதமாக விமர்சிக்கும் காங்கிரஸ்!

    கடும் வீழ்ச்சியில் ரூபாய் மதிப்பு: பிரதமரை கலாய்க்கும் விதமாக விமர்சிக்கும் காங்கிரஸ்!

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆளுங்கட்சியை, கடந்த சில நாட்களாகவே அடிக்கடி விமர்சித்து வருகிறது காங்கிரஸ். இந்நிலையில், இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, பா.ஜ.க.வை விமர்சிக்க காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகி விட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி அடைந்ததை சுட்டிக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் காந்தி உள்பட சில காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பானது, இதுவரையிலும் இல்லாத அளவுக்கு 77.50 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சியை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடி மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

    ராகுல் காந்தி ட்விட்டரில் பிரதமர் மோடியை விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி ஜி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்த போது நீங்கள் மன்மோகன் சிங்கை விமர்சனம் செய்தீர்கள். தற்போது, ரூபாயின் மதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. ஆனால், உங்களை நான் விமர்சிக்க மாட்டேன். ஏற்றுமதியாளர்களுக்கு மூலதனத்தை அளித்து, வேலைகளை உருவாக்க முயற்சித்தால், ஏற்றுமதிக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி நல்லது. நமது பொருளாதாரத்தை வளர்ச்சிகரமாக நிர்வகிப்பதில் கவனம் செலுத்துங்கள். அதை விட்டு தலைப்பு செய்திகளில் இடம்பெற நினைக்க வேண்டாம் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரும், பொதுச் செயலாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், கடந்த 75 வருடங்களில் இல்லாத அளவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பானது, 77.41 ஆக சரிவைச் சந்தித்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சியில் இந்திய ரூபாய் மதிப்பு ஐ.சி.யூ.வில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய ரூபாய் மதிப்பு, பா.ஜ.க.வின் மார்க்தர்ஷக் மண்டல் வயதை கடந்து விட்டது. மேலும், இந்திய ரூபாய் மதிப்பானது, பிரதமர் வயதையும் தாண்டி வீழ்ச்சி அடைந்துள்ளது. அதற்கான காரணங்கள் என்ன? என அவர் பதிவு செய்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே ட்விட்டரில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், எப்படி பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார் என பதிவு செய்துள்ளார்.

    ஆசிரியர்களிடம் அடாவடி செய்தால் இனி அவ்வளவுதான்; மாணவர்களே உஷார்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....