Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஆசிரியர்களிடம் அடாவடி செய்தால் இனி அவ்வளவுதான்; மாணவர்களே உஷார்!

    ஆசிரியர்களிடம் அடாவடி செய்தால் இனி அவ்வளவுதான்; மாணவர்களே உஷார்!

    கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் அத்துமீறும் வீடியோக்கள் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன.

    மாணவர்கள், ஆசிரியர்களிடம் ஆபாசமாகப் பேசுவது, மிரட்டுவது, அடிக்கப்போவது, மேஜை, நாற்காலிகளை உடைப்பது, பேருந்துகளில் தொங்கிக்கொண்டு வருவது என ஒவ்வொரு வீடியோவும் பகீர் ரகம். இதனை தொடர்ந்து கண்ணியம் குறைவாக நடக்கும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வந்தனர்.

    இது குறித்து முன்னரே குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் கூறியது என்னவென்னில்: இதுவரைக்கும் மொத்தமாகவே பத்து வீடியோக்கள்தான் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் ஐந்து பழைய வீடியோக்கள். ஆனால், ஏதோ ஒட்டுமொத்தப் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களிடம் அத்துமீறுவதைப் போலவும் குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்கள் அப்படி நடந்துகொள்வதாகவும் சித்தரிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகள் என்றாலே மோசமானவை என்கிற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இது அடிப்படையிலேயே தவறான ஒரு விஷயம்.

    கொரோனாவுக்குப் பிறகு 16 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளுக்கு வந்திருக்கிறார்கள். அதனால், தனியார் பள்ளிகளின் சதியாக இருக்குமோ என்கிற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. தனியார் பள்ளி சார்ந்து இதுவரை ஒரு வீடியோகூட வெளியாகவில்லை, அப்படியே வெளியானாலும் பள்ளியின் பெயர் வெளியில் வராது. நெருக்கடி கொடுத்து எடுத்து விடுவார்கள் என்று தெரிவித்து இருந்தார்.

    மேலும், இது தொடர்பாக சட்டசபையில் பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார். இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்ததாவது: வரும் கல்வியாண்டில் இருந்து நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்திவிட்டே, பின் பாடங்கள் நடத்தப்படும். இன்றைய கால கட்டத்தில் கவனச்சிதறல்கள் அதிகரித்துள்ளது.

    மன அழுத்தத்தில் இருந்த குழந்தைகளை கட்டுப்படுத்தும் விதத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறைகூறுவது தவறு. பள்ளிகள் – பெற்றோர்கள் – அரசு ஆகியோருக்கு கூட்டுப்பொறுப்பு உள்ளது.

    மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால் சான்றிதழ்களில் என்ன காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டு, பள்ளியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்’. மாணவர்கள் பள்ளிக்கு கைப்பேசி கொண்டு வருவது முற்றிலும் தடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

    உக்ரைன் மீது போர்த் தொடுக்க ஒரு நாளைக்கு இவ்வளவு கோடி செலவு செய்கிறதா இரஷ்யா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....