Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்தொடர்ந்து சரியும் பங்குச்சந்தைகள்; வீழ்கிறது ரூபாய் மதிப்பு!

    தொடர்ந்து சரியும் பங்குச்சந்தைகள்; வீழ்கிறது ரூபாய் மதிப்பு!

    தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் இந்திய பங்குச்சந்தைகள் இறக்கத்தில் முடிந்தன. கடந்த மூன்று நாட்களாக இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது. பணவீக்கத்தினாலும், உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் பதற்றத்தால் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன.

    பணவீக்கத்தின் காரணமாக உலக வர்த்தகமே கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. பணவீக்கத்தினை கட்டுப்படுத்த பல நாடுகள் தங்களது வட்டி விகிதத்தினை உயர்த்தி வருகின்றன. அமெரிக்காவின் வட்டி விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் சமீபத்தில் உயர்த்தியது. இது போல இந்தியாவிலும் ரிசர்வ் வங்கியானது 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது.

    செவ்வாய்கிழமையான இன்று இந்திய பங்குச்சந்தைகளில், நிஃப்டி 61.8 புள்ளிகள் சரிந்து 16240 புள்ளிகளாக உள்ளது. சென்செக்ஸ் 105.82 புள்ளிகள் சரிந்து 54364 புள்ளிகளாக உள்ளது. சன் பார்மா, என்டிபிசி ஆகியவை அதிக இறக்கத்தினைச் சந்தித்து உள்ளன. அதிகபட்சமாக டாடா ஸ்டீல்ஸ் 7.22 சதவீதம் சரிவைச் சந்தித்து உள்ளது.

    ஏசியன் பெயிண்ட்ஸ், இண்டஸ்லேண்ட் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் ஆகிவை ஏற்றத்தில் முடிந்துள்ளன. அதிகபட்சமாக ஹிந்துஸ்தான் யூனிலீவர் 3 சதவீதம் ஏற்றத்தினைச் சந்தித்துள்ளது.

    டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது இன்று ஒரு டாலரின் விலை இந்திய மதிப்பில் சுமார் 77.29 ரூபாயாக உள்ளது. தொடர்ந்து சரிந்து வரும் பங்கு சந்தை மதிப்புகள் இந்திய வர்த்தகர்களை மட்டுமின்றி உலக வர்த்தகர்கள் அனைவரிடத்திலும் பெரும் அதிருப்தியை எற்படுத்தி வருகின்றன.

    நெஞ்சுக்கு நீதி பட விழாவில், சிவகார்த்திகேயன் பேச்சைக் கேட்டு கண்கலங்கிய அருண் ராஜா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....