Monday, March 18, 2024
மேலும்
    Homeஆன்மிகம்பலி கொடுத்தலுக்கு பின் உள்ள விஷயம்; இப்படியெல்லாம் பலி கொடுப்பார்களா?

    பலி கொடுத்தலுக்கு பின் உள்ள விஷயம்; இப்படியெல்லாம் பலி கொடுப்பார்களா?

    பலி கொடுத்தல் அல்லது காவு கொடுத்தல் ஒரு சமயச் சடங்கு ஆகும். பலி கொடுத்தல் கடவுளை நோக்கி வரம் வேண்டி கடவுளை மகிழ்ச்சி செய்வதற்காக விலங்குகளை உயிர்ப் பலி கொடுப்பதைக் குறிக்கும்.

    யாகம், பூசை போன்ற சடங்குகளோடு இது இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. பெரிய கோயில்களில் பலி கொடுத்தல் வழக்கத்தில் இல்லை, ஆனால் பல கோயில்களில் ஆடு, கோழி போன்ற விலங்குகளைப் பலி கொடுக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது.

    நாட்டுப்புறங்களில் உள்ள பழங்குடி மரபுகளில் வலுவாக இப்பழக்கம் வேரூன்றியுள்ளன. இந்தியாவில் பண்டைய காலங்கள் முதற்கொண்டு இன்று வரை விலங்கு மற்றும் பறவைகளை பலிகொடுக்கும் வழக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதே நேரத்தில், கீதை உள்ளிட்ட இந்து வேதங்களும் புராணங்களும் விலங்குகளை பலிகொடுக்கும் முறையை வன்மையாக கண்டிக்கின்றனர்.

    பலி கொடுத்தலின் விளக்கம்:

    பலி கொடுத்தல் நம்மில் உறையும் விலங்குக் குணங்களை அழியச் செய்வதன் மூலம் இறை நெருக்கத்தை எட்டுதலாகும். ஆயினும் இதை மக்கள் வேறொரு வடிவம் கொடுத்துப் பின்பற்றி வருகின்றனர். தாம் செய்த பாவத்தை மன்னிக்க வேண்டி வேறொரு உயிரைப் பலியிடுதல் யாமளம், மாத்ருதந்திரம் ஆகிய சாக்த ஆகமங்களும், சில வைதீக பாக யக்ஞங்களிலும் உயிர் பலி பரிந்துரைக்கப்படுகிறது.

    பலியிடும் முறை :

    பலியிடப்படும் ஆடு, மாடு போன்ற விலங்குகளில் ஆண் பாலினத்தைச் சேர்ந்தவை பலியிடுவதற்காகத் தேர்வு செய்யப்படுகின்றன. கோழியாக இருந்தாலும் அதன் ஆண் பாலினமான சேவலையே பலியிடத் தேர்வு செய்கின்றனர். இவற்றில் விலங்கிலோ அல்லது சேவலிலோ வெள்ளை நிறமிருந்தால் அவை நிராகரிக்கப்படுகின்றன.

    பலியிடத் தயாராகவுள்ள விலங்கு அல்லது சேவல் மீது மஞ்சள் கலந்த நீர் தெளிக்கப்படுகிறது. அதன் கழுத்தில் மலர்களாலான சிறு மாலைத் துண்டு அணிவிக்கப்படுகிறது. பின்னர் மஞ்சள் நீர் தெளிக்கப்படுகிறது. அது மூன்று முறை தலையைக் குலுக்கும் போது அது சம்மதம் தெரிவித்து விட்டதாகக் கருதி அதைப் பலியிடுகின்றனர்.

    வெளிநாடுகளில் பலியிடும் முறை:

    இந்து சமயம் மட்டுமல்லாது, இவ்வழக்கம் உலகின் பல பகுதிகளில் நடைபெற்று வந்துள்ளது. மெக்சிகோ பகுதிகளில் மாயன் என்னும் இனத்தவர்கள் உயிர் பலி கொடுக்கும் வழக்கமுடையவர்கள்.

    தெற்கு நேபாளத்திலிருந்து பாரா மாவட்டத்தில் நடைபெறும் காதிமாய் திருவிழா மிகவும் மோசமானது. இங்கு நூற்றுக்கணக்கான உயிரினங்கள் பயங்கரமான வழிகளில் கொல்லப்படுகிறது.

    சினை ஆடு பலியிடுதல்:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சில பெண் தெய்வங்களுக்கு நிறைமாத சினையாக உள்ள பெண் ஆடுகளைப் பலியிடும் வழக்கம் இருக்கிறது. சாமியின் முன் நிறுத்தப்படும் சினை ஆட்டின் வயிற்றை குத்திக்கிழித்து உள்ளே இருக்கும் குட்டியை எடுத்து பலி பீடத்தின் மீது வைப்பார்கள்.

    குத்திக்கிழிப்பதால் தாய் ஆடும் இறந்து விடும், குட்டியும் இறந்துவிடும். இதனை சூலாடு குத்துதல் அல்லது துவளக்குட்டி கொடுத்தல் என்று அழைக்கிறார்கள். இந்தச் சடங்கு கோபாலசமுத்திரத்தில் உள்ள சீவலப்பேரி சுடலை கோயிலில் வருடந்தோறும் நடைபெறுகிறது.

    குட்டி ஆட்டின் இதயத்தை பலிகொடுக்கும் முறை: 

    வள்ளியூர் அருகே பெருமளஞ்சி சுடலைமாடன் கோயிலில் இசக்கியம்மனுக்கு குட்டியாட்டைப் பலி கொடுக்கும் முறை வித்தியாசமானது. இசக்கியம்மன் முன் தொட்டில் கட்டி அதில் பிறந்து ஓரிரு நாளே ஆன குட்டியை குழந்தையைப் போல படுக்கை வைத்து ஆட்டுவார்கள்.

    பிறகு தொட்டிலுக்குள்ளேயே அதன் நெஞ்சைக்கீறி, இதயத்தை அம்மனுக்குப் படைப்பார்கள். இதுபோன்ற சடங்குகள் பெண்களுக்கு பெரும் அச்சம் தரும் சடங்கு என்பதால், பெண்களையும், குழந்தைகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்திவிடுவார்கள்.

    எருமைக்கிடாக்கள் பலியிடுதல்:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மட்டப்பாறைப்பட்டி பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆயிரம் முதல் 1500 எருமைக்கிடாக்கள் பலியிடப்படுகின்றன. அதே மாவட்டத்தில் தொட்டியம் மதுரகாளியம்மன் கோயிலிலும் எருமைகிடாக்கள் பலியிடப்படுகின்றன. பொதுவாக பலியிடப்படும் விலங்குகளை பலியிட்டவர்களே சமைத்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், பெரும்பாலான எருமைக்கிடாக்கள் அப்படியே புதைக்கப்பட்டு விடுகின்றன.

    பன்றிகளை பலியிடுதல்:

    மதுரை மாவட்டம் வன்னிவேலம்பட்டி சந்தன மாரியம்மன் கோவிலில், இளம் ஆடு மற்றும் பன்றிக்குட்டிகளின் தலையை அறுத்து கோயில் அருகே புதைக்கும் வழக்கம் உள்ளது.

    பிரியாணி பிரசாதம்:

    தமிழகம் முழுவதும் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் அசைவ உணவகம் நடத்துவோரின் குல தெய்வக்கோயில்கள் மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ளன. இங்கு நூற்றுக்கணக்கான ஆடுகளை வெட்டி, அங்கேயே பிரியாணியாக சமைத்து லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கி விடுகிறார்கள்.

    பலி கொடுக்கப்பட்ட ஆடு அல்லது கோழியின் இறைச்சியை உணவாக்கி சிறு தெய்வங்கள் முன்பு படைத்துவிட்டு அதன் பிறகு அந்த அசைவ உணவை உண்ணும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது போன்ற பலியிட்டு வழிபடும் வழக்கம் காவல் தெய்வங்களான கருப்பசாமி, மாடன், இசக்கியம்மன் போன்ற சிறுதெய்வ வழிபாடுகளிலேயே அதிகம் நடைபெறுகிறது.

    எப்போதும் இளமை, நார்ச்சத்து இன்னும் பல – ப்ரோக்கோலியின் பயன்கள் உள்ளே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....