Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைபற்றி எறிந்த ராஜபக்சேவின் வீடு, பதற்றத்தின் உச்சத்தில் இலங்கை!

    பற்றி எறிந்த ராஜபக்சேவின் வீடு, பதற்றத்தின் உச்சத்தில் இலங்கை!

    இலங்கையில் கலவரக்காரர்கள் ஆளும் கட்சியினரின் வீடுகளுக்கு தீ வைத்ததினையடுத்து பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

    கடந்த சில மாதங்களாக ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலங்கையில் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களின் தட்டுப்பாடு பெருமளவில் அதிகரித்தது. பெட்ரோல், டீசல், சமையல் பொருட்களின் விலை உயர்ந்ததன் காரணமாக மக்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்தனர்.

    இதன் விளைவாக பெரும் போராட்டமானது ஆளும் கட்சிக்கு எதிராக உருவானது. தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் உட்பட அனைத்து தரப்பட்ட இலங்கை மக்களும் வேறுபாடுகளைக் களைந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இலங்கையின் அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கொழும்புவின் மையப்பகுதியிலுள்ள காலிமுகத் தீவில் நடைபெற்ற போராட்டமானது ஒரு மாதத்தினை நிறைவு செய்யும் நிலையில், இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலகுவதாகத் தகவல்கள் வெளியாயின.

    இந்நிலையில், இராஜபக்சே வின் ஆதரவாளர்கள் நேற்று (மே 9) போராட்டக்களத்திற்குச் சென்று போராட்டக்காரர்களைக் கம்புகளால் தாக்கி, அவர்களது கூடாரங்களைத் தீக்கிரையாக்கினர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. இந்த மோதலையடுத்து, இலங்கையில் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த பரபரப்பான சூழலினையடுத்து தமது ராஜினாமா கடிதத்தை மஹிந்த ராஜபக்சே, இலங்கை அதிபருக்கு அனுப்பினார்.

    இலங்கை பிரதமரின் வீடு

    இராஜபக்சேவின் ஆதரவாளர்களால் தாக்குதகுக்கு ஆளான போராட்டக்காரர்கள் ஆளும் கட்சியினரின் வீடு மற்றும் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். முக்கியமாக மஹிந்த ராஜபக்சே உறவினர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

    குறிப்பாக இலங்கையின் தென் மாகாணமான அம்பந்தோட்டையில் அமைந்துள்ள இராஜபக்சேவின் பூர்வீக வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி இலங்கைக் காவலர்கள் கலவரத்தைக்  கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இராஜபக்சே  தங்கி இருந்த அலரி மாளிகையின் நுழைவாயிலுக்கும், அருகிலிருந்த பேருந்துக்கும் தீ வைக்கப் பட்டது. அலரி மாளிகையிலிருந்து மஹிந்த ராஜபக்சே பலத்த பாதுகாப்புகளுக்கிடையே வெளியேறினார்.

    பிரதமர் பதவி விலகிய நிலையில், இலங்கை அதிபராகிய கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்று கலவரக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    பருத்தி நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்குமா மத்திய அரசு? அன்புமணி இராமதாஸ் வேண்டுகோள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....