Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'உப்பு தின்னா தண்ணி குடிச்சு தான் ஆகணும்' ராஜபக்சே நிலை குறித்து விஜயகாந்த் கருத்து!

    ‘உப்பு தின்னா தண்ணி குடிச்சு தான் ஆகணும்’ ராஜபக்சே நிலை குறித்து விஜயகாந்த் கருத்து!

    ஒரு இனத்தை அழித்த ராஜபக்சே இன்று மிகப்பெரிய தண்டனையை அனுபவித்து வருகிறார் என்று விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

    கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரில் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் இனத்தை அழிக்க வேண்டும் என்ற முனைப்பில் ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்கள் சர்வதேச நாடுகளின் உதவியுடன் குண்டுகளைப் வீசி தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்தனர். ஒட்டு மொத்த உலகமும் அதை அன்று கைக்கட்டி வேடிக்கை பார்த்தது.

    போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டுமென சர்வதேச அளவில் பரவிக்கிடக்கும் தமிழர்கள் இன்றளவும் கண்ணீர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஜெனிவாவில் இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனாலும் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என கூற ஐக்கிய நாடுகள் தயங்குகின்றன.

    தமிழர்களின் கண்ணீர் தமிழர்களின் துயரம் நிச்சயம் ஒருநாள் ராஜபக்சேவையும் அவரது குடும்பத்திற்கு தண்டனை தேடித்தரும் என்ற சாபத்தை தமிழர்கள் தொடர்ந்து விடுத்து வந்தனர். ராஜபக்சே அவரது குடும்பத்தினரின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

    அந்நாட்டு மக்கள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வேண்டுமென தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மக்களின் போராட்டத்திற்கு செவிமடுக்காமல் ராஜபக் குடும்பம் அதே ஆணவத்தோடு இருந்து வந்தது. இந்நிலையில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு ராஜபக்சேவின் சொகுசு மாளிகை தீவைத்து எரித்துள்ளனர். ஒட்டுமொத்த ராஜபக்ச குடும்பம் தலைமறைவாகி உள்ளது திரும்பிய பக்கமெல்லாம் இலங்கையில் கலவரமாக காட்சியளிக்கிறது.

    விஜயகாந்த் அறிக்கை :

    இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு இனத்தை அழித்த ராஜபக்சே இன்று மிகப்பெரிய தண்டனையை அனுபவித்து வருகிறார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை பிரச்னை, விலைவாசி உயர்வு ஏற்பட்டதை அடுத்து நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்தது.

    ராஜபக்சே சகோரதரர்கள் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மகிந்தாவின் ஆதாரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் தலைநகர் கொழும்புவில் வன்முறை வெடித்தது. இந்நிலையில் போராட்டக்காரர்களின் அழுத்தத்திற்கு பணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.

    ஒரு இனத்திற்காக போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இரக்கமற்ற முறையில் கொலை செய்து, அத்தனை மக்களையும் கொலை, கொள்ளை பலாத்காரம் செய்து மிக கொடூரமாக நடந்து கொண்ட ராஜபக்சேவிற்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை இது.

    முன்பெல்லாம் பாவம் செய்தால் அதற்கான தண்டனையை பெற பல ஆண்டுகள் ஆகும். ஆனால் தற்போது பாவத்திற்கான தண்டனையை கண்ணெதிரிலேயே அவர்கள் அனுபவித்து வருகிறார்கள்.

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். உப்பு தின்னா தண்ணி குடிச்சு தான் ஆகணும். தப்பு செய்தவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. அதிகாரம் கையில் இருக்கும்போது மமதையின் காரணமாக மக்களை மதிக்காத யாராக இருந்தாலும் இதுதான் தீர்ப்பு என்பதை இன்றைக்கு இலங்கையில் ராஜபக்சேவுக்கு நடந்திருப்பது பறைசாற்றுகிறது.

    இலங்கை முழுவதும் தீப்பற்றி எரிகிறது. இனப்படுகொலை செய்யப்பட்ட போது தமிழீழ மக்கள் ஒவ்வொருவரின் வயிறு எப்படி எரிந்ததோ, அந்த சாபம் தான் இன்றைக்கு இலங்கையே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இன்றைக்குதான் அந்த இனப்படுகொலைக்கே ஒரு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது.

    அநீதி இழைத்த இலங்கையில் தற்போது தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு இன்றைக்கு குளிர்ந்த பூமியாக மாறியிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு செய்த கொடுமைகளுக்காகவும், அப்பாவி தமிழர்களை கொன்றதற்காகவும் ராஜபக்சே குடும்பத்திற்கு கிடைத்த தண்டனையாக தான் இதை பார்க்கப்படுகிறது. இது வரவேற்கத்தக்கது. அதேசமயம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்கள் விரைவில் அதிலிருந்து மீளவேண்டும்.

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கான ஒரே சான்று இந்த சரித்திரம். எனவே இன்றைக்கு தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அவருடன் இறந்த அனைத்து தமிழீழ மக்களின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும். எனவே, அந்த மக்களை இன்று நாம் நினைத்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    பிரதமர் மகிந்த ராஜபக்சே இராஜினாமா; வன்முறை வெடித்ததால் இலங்கையில் ஊரடங்கு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....