Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைபிரதமர் மகிந்த ராஜபக்சே இராஜினாமா; வன்முறை வெடித்ததால் இலங்கையில் ஊரடங்கு!

    பிரதமர் மகிந்த ராஜபக்சே இராஜினாமா; வன்முறை வெடித்ததால் இலங்கையில் ஊரடங்கு!

    இலங்கையில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் விளைவால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, மக்களை வாட்டி வதைக்கிறது. இதனை சமாளிக்க இந்தியாவிடம், இலங்கை உதவி கேட்டது.

    இந்தியாவும் பெரும் பணத்தொகையை அளித்து உதவியது. இந்நிலையில் மகிந்த ராஜபக்சே, இலங்கையின் பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதற்கு முன்பாக, போராட்டக்காரர்களின் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால், பல இடங்களில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

    ராஜபக்சே குடும்பத்தினரின் சில தவறான முடிவுகள் தான், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காராணம் எனவும், இதற்கு அவர்களே பொறுப்பேற்று அதிபரான கோத்தபய ராஜபக்சேவும், பிரதமரான மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுனர். எதிர்க்கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும் கூட, இலங்கை அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக, போராட்டம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் பதவியைக் கொடுத்து, ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்தும் அதனை எதிர்க்கட்சிகள் ஏற்காமல் தவிர்த்தன.

    இலங்கையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர், நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இருப்பினும் மக்கள் போராட்டம் ஆங்காங்கே தீவிரமடையத் தொடங்கியது. ராஜபக்சே இராஜினாமா செய்ய வேண்டும் என தொடர் போராட்டங்கள் நடந்த நிலையில், அவரை பதவி விலகுமாறு அதிபர் கோத்தபய கேட்டுக் கொண்டார். எனினும், ராஜபக்சே ஒருபோதும் இராஜினாமா செய்யமாட்டார் என ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.

    இந்த நிலையில், இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள, பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பாக ஏராளமான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

    பிறகு, அங்கு திரண்ட ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். ராஜபக்சே ஆதரவாளர்கள் சென்ற பேருந்தை, பொதுமக்கள் அடித்து நொறுக்கி விட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவையும் தாக்க முயன்றதால் பதற்றமான சூழ்நிலை உருவானது. பின், காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து போராட்டக்காரர்களை கலைத்தனர்.

    இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கொழும்புவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்குப் பின், கொழும்பு மற்றும் மேற்கு மாகாணங்களில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலைப் பிரகடனம், இலங்கை முழுவதும் உடனடியாக அமலுக்கு வருகிறது என அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்நிலையில், தற்போது இலங்கை பிரதமர் ராஜபக்சே, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். மக்களுக்காக எந்த ஒரு தியாகத்தையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன் என மகிந்த ராஜபக்சே தெரிவித்திருக்கிறார்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளால், மக்களின் அன்றாட வாழ்க்கை முறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை மாறி, மீண்டும் இலங்கையில் சாதாரண சூழல் நிலவுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    உக்ரைன் மீது போர்த் தொடுக்க ஒரு நாளைக்கு இவ்வளவு கோடி செலவு செய்கிறதா இரஷ்யா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....