Saturday, March 16, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    துலாம்: 

    துலாம் ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். சகோதர வழியில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் எப்போதும் இருக்கும் சூழ்நிலையே நீடிக்கும். தொழிலில் லாபம் கிடைக்க சற்று அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். 

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு ஓரளவு நன்மைகள் நடைபெறும் நாட்களாக காணப்படுகின்றன. குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்லக் கூடிய வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு இட மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தொழிலில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதலான லாபம் கிடைக்கும். 

    தனுசு: 

    தனுசு ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை மூலம் நல்லது நடக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழிலில் ஓளரவு லாபம் கிடைக்கும். 

    மகரம்: 

    மகர ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு, ஓரளவு சுமாரான நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. திருமண காரியங்கள் கைக்கூடி வரும். கணவன்-மனைவி இடையே சில பிரச்சனைகள் தோன்றி மறையும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரித்து காணப்படும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். 

    கும்பம்: 

    கும்ப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு அதிக நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக காணப்படுகின்றன. பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. குல தெய்வ வழிபாடு செய்வதன் மூலம் மன நிம்மதி கிடைக்கும். அலுவலக பணிகளில் கவனமுடன் இருக்க வேண்டும். தொழிலில் கூடுதல் உழைப்பு தேவை. 

    மீனம்: 

    மீன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாட்களாக அமைந்துள்ளன. பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். திருமண முயற்சிகள் சாதகமாக அமையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலை சுமை அதிகரிக்கும். எதிர்ப்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமதம் நீடிக்கும்.தொழிலில் லாபம் ஓரளவு காணப்படும். சிலருக்கு தொலைத்தூர பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....