Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஜூலை முதல் மாதந்தோறும் 1000 ரூபாய் உங்களின் வங்கி கணக்கிற்கு வந்து சேருமாம்! - அரசு...

    ஜூலை முதல் மாதந்தோறும் 1000 ரூபாய் உங்களின் வங்கி கணக்கிற்கு வந்து சேருமாம்! – அரசு அறிவிப்பு!

    காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 முதல் கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என உயர் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடப்பு ஆண்டுக்கான 2022-23 முழுமையான பட்ஜெட்டை கடந்த மார்ச் 18 ஆம் தேதி தாக்கல் செய்தது. சட்டசபையில் பட்ஜெட் உரையைத் தொடங்கிய நிதியமைச்சர் பிடிஆர், பல முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அப்போது, அவர் பெண் கல்வியை உறுதி செய்யும் விதமாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வியில் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் மாதம் 1000 ரூபாய் அளிக்கப்படும் என அறிவித்தார்.

    தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

    இதன் மூலம், அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கான மாணவியர் பட்டியல் சேகரிப்பு பணிகள் தொடங்கி உள்ளன.

    அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் படிக்கும் மாணவியரில், அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தோரின் விபரங்களை அனுப்புமாறு, இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு உயர்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    அதன்படி, அடுத்த கல்வியாண்டில் சேரும் முதல் வருட கல்லூரி மாணவிகளுக்கு ஜூலை 15 முதல் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், இந்த திட்டம் மூலம் 3 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் உதவித்தொகை பெற விரும்பும் மாணவிகள் கட்டாயமான முறையில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ‘நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை’ ஆளுநரிடம் கோரிக்கை வைத்த அமைச்சர் பொன்முடி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....