Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை' ஆளுநரிடம் கோரிக்கை வைத்த அமைச்சர் பொன்முடி!

    ‘நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை’ ஆளுநரிடம் கோரிக்கை வைத்த அமைச்சர் பொன்முடி!

    கோவை பாரதியார் பல்கலையில் 37-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. நிகழ்ச்சியில், தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் உயர் கல்வி படித்து வருகின்றனர். இது தான் திராவிட மாடல் என்று குறிப்பிட்டுள்ளார்.

    நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:

    தமிழகமானது இந்திய அளவில் கல்வியில் சிறந்து விளங்குகிறது. அனைவரும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அளவில் தமிழகம் 53 சதவீதம் உயர் கல்வியில் உயர்ந்துள்ளது என்றும் பொன்முடி தெரிவித்தார்.

    தமிழக முதல்வர் கல்வி, சுகாதாரம் இரண்டு கண்கள் போல என கூறுகிறார். கல்வித்துறை மற்றும் தொழில்துறை, தொழிலாளர் நலத்துறை இணைந்து படிக்கும் போதே மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    கவர்னரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன், நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை; ஹிந்திக்கும் எதிரானவர்கள் இல்லை. ஹிந்தி படிக்க விருப்பம் உள்ளவர்கள் ஹிந்தியை படிக்கட்டும். அது எங்களுக்கு பிரச்னை இல்லை. ஹிந்தியை மாற்று மொழியாக வைத்து கொள்ளலாம், திணிக்கக் கூடாது என்றும் கூறினார்.

    “தமிழகத்திலேயே கேட்கிறார்கள் ; ஏன் ஸ்டாலின் இந்தியை எதிர்க்கிறார் என்று. தமிழகத்தில் இந்தி படித்தால் வேலை கிடைத்துவிடுமா என்ன?. இந்தி தெரிந்தவர்கள் இங்கு என்ன செய்கிறார்கள், பானிபூரி விற்கும் நிலை தான் இருக்கிறது. தமிழகத்தில் தாய் மொழியாக தமிழ், சர்வதேச மொழியாக ஆங்கிலம் பயன்பாட்டில் உள்ளது.

    நாங்கள் சர்வதேச மொழியான ஆங்கிலத்தை படித்து வருகிறோம். எதற்கு மாற்று மொழி? நாங்கள் புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயாராக உள்ளோம். ஆனால், மொழியில் எங்கள் சிஸ்டத்தை தான் பின்பற்றுவோம்.

    தமிழக முதல்வர், மாணவர்களுக்காக தமிழ்நாடு கல்வி கொள்கை குழுவை ஏற்படுத்தி உள்ளார். இந்த குழுவின் அடிப்படையில் கல்வி கொள்கை ஏற்படுத்தப்படும். கவர்னரிடம் எங்களின் உணர்வை தான் வெளிப்படுத்துகிறோம்.

    அதனை புரிந்து கொண்டு கவர்னர் மத்திய அரசிடம் எங்கள் நிலைப்பாட்டை விளக்க வேண்டும். தமிழ் மாணவர்கள் எந்த மொழியை வேண்டும் என்றாலும் கற்றுக்கொள்ள தயாராக உள்ளனர். ஹிந்தி மாற்று மொழி தான். அதனை கட்டாயமாக்க கூடாது” என்றும் பொன்முடி அவர்கள் நிகழ்ச்சியில் கூறினார்.

    மேலும், தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் இரண்டு தான் கட்டாய மொழியாக உள்ளது. மாணவர்கள் மூன்றாவது மொழியாக என்ன வேண்டுமானாலும் படிக்கலாம். இது தான் தமிழ்நாடு கல்வி கொள்கை குழு மூலம் செயல்படுத்தப்படும். அரசு பள்ளிகளில் சிறந்த மாணவர்கள் உருவாக்க இந்த திட்டம் உதவும் என்று தெரிவித்தார்.

    பட்டம் பெற்றவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை அளிப்பவர்களாக இருக்க வேண்டும். மீண்டும் ஒரு முறை கவர்னரிடம் கோரிக்கை வைக்கிறேன். எங்கள் பிரச்னை, மாணவர்கள் பிரச்னை ஆய்வு செய்து புதிய கொள்கை குறித்து ஆய்வு செய்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். தமிழ் உங்களின் படிப்பு அறிவை வளர்த்துக் கொள்ள உதவும். ஆசிரியர்கள் தங்களின் தகுதியை மேம்படுத்த வேண்டும் என்றும் பொன்முடி பேசினார்.

    61 வருடங்களுக்குப் பிறகும், பல திரைப்படங்களில் இப்பாடல் ஒலிக்கிறது; ஏனென்றால்…….?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....