Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'இனிமேலாவது தமிழகத்தில் ஊழல், லஞ்சம் இல்லா நிலை வர வேண்டும்...' - ஜி.கே. வாசன் ஆவேசம்!

    ‘இனிமேலாவது தமிழகத்தில் ஊழல், லஞ்சம் இல்லா நிலை வர வேண்டும்…’ – ஜி.கே. வாசன் ஆவேசம்!

    பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட விண்ணப்பித்த மணிகண்டன் அவர்களிடம் லஞ்சம் கேட்டதாலும், வீடு கட்ட தாமதமானதாலும், மணிகண்டன் அவர்கள் தற்கொலை செய்துக்கொண்டார். இந்நிகழ்வானது, தற்போது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிகழ்வு குறித்து பேசிய ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளது பின்வருமாறு:

    தமிழகத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட விண்ணப்பித்த மணிகண்டன் அவர்கள் லஞ்சம் கொடுத்தும் வீடு கட்டுவதில் தாமதமானதால் உயிரை மாய்த்துக்கொண்டது மிகவும் வருத்தத்துக்குரியது.

    மக்கள் நலன் காக்கும் திட்டமான பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டமானது மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும், மாநில அரசின் அதிகாரிகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அப்படி இருக்கும் போது அத்திட்டத்தினை தமிழக அரசு முறையாக செயல்படுத்த வேண்டும். அதற்காக அத்திட்டம் தொடர்பாக அரசு அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வேண்டும் என்பதை தமிழக அரசு உறுதி செய்து கொண்டிருக்க வேண்டும்.

    ஆனால், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வேலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கமுதக்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட விண்ணப்பித்த பிறகு, முதல் மற்றும் இரண்டாவது தவணைப் பெறுவதற்கு லஞ்சம் கேட்ட தமிழக அரசு அதிகாரியின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

    அதாவது முதல் தவணைக்கான நிதியை வழங்க, நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றும் கிராம மேற்பார்வையாளர், குடிசை வீட்டில் வசித்து வந்த மணிகண்டனிடம் லஞ்சம் கேட்டு, வாங்கிக்கொண்டார்.

    தொடர்ந்து இரண்டாவது தவணைக்கான பணத்தை வழங்க, கிராம மேற்பார்வையாளர் லஞ்சம் கேட்டதால் வெளிநாடு செல்வதற்காக வைத்திருந்த பணத்தை மணிகண்டன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் பல நாட்களாக இரண்டாவது தவணைக்காக பணம் வழங்கப்படாததால் மணிகண்டன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரை மாய்த்துக் கொண்டு உள்ளார்.

    தமிழக அரசின் அதிகாரி கேட்ட, வாங்கிய லஞ்சத்தால் ஓர் உயிர் பலியாகியிருப்பது மிகவும் வேதனைக்குரியது. தமிழக அரசு, அந்த கிராம மேற்பார்வையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் இனிமேல் தமிழகத்தில் ஊழல், லஞ்சம் ஆகியவற்றிற்கு இடம் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.

    லஞ்சம் கேட்ட, வாங்கிய அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இது போன்ற ஒரு சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், உயிரிழந்த மணிகண்டனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரிடம் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.

    மத்திய அரசு திட்டமோ, மாநில அரசு திட்டமோ – மக்கள் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தும் போது நேர்மையை கடைப்பிடிப்பதோடு, காலதாமதமின்றி அத்திட்டம் மக்களுக்கு பயன் அளிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியது அரசின் கடமை. மணிகண்டனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்

    மக்கள் நலன் காக்கும் திட்டங்களில் நேர்மையை கடைப்பிடிப்பதோடு, காலதாமதமின்றி அத்திட்டம் மக்களுக்கு பயன் அளிக்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

    கொண்டைக்கடலையில் இவ்வளவு நன்மையா? படித்துப் பாருங்கள்; தினமும் பின்பற்றுவீர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....