Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அபுதாபியின் ஆட்சியாளர் காலமானார்; அனுசரிக்கப்பட்டுள்ளது, துக்கம்!

    அபுதாபியின் ஆட்சியாளர் காலமானார்; அனுசரிக்கப்பட்டுள்ளது, துக்கம்!

    2004 ஆம் ஆண்டு முதல் அபுதாபியில் ஆட்சியாளராகவும், ஒருங்கிணைந்த அரபு நாடுகளின் அதிபராகவும் பதவி வகித்த ஷேக் கலீஃபா இன்று காலமானார். அவருக்கு வயது 73.

    இதனால் அந்நாட்டு அமைச்சரவையானது 40 நாட்கள் துக்க அனுசரிப்பு நாளாக அறிவித்துள்ளது. மேலும், அரைக்கம்பத்தில் கொடிகளை பறக்க விடவும் அரசு சம்பந்தப்பட்ட அலுவல்கள் இன்றிலிருந்து செயல்படாது எனவும் அறிவித்துள்ளது.

    அபுதாபியில் ஆட்சியாளராய் இருந்த ஷேக் கலிஃபாவினை மக்கள் அரிதாக மட்டுமே பொதுவெளியில் பார்த்துள்ளனர். முக்கியமாக 2014ம் ஆண்டு அவருக்கு மாரடைப்புக்கான சிகிச்சை பெற்றதிலிருந்து அவர் அதிகம் பொது வெளியில் வருவதை தவிர்த்து வந்தார். அபுதாபியின் அடுத்த ஆட்சியாளராக அவரது சகோதரர் முகமத் பின் வருவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    ஷேக் கலிஃபாவின் மரணத்திற்கான காரணங்கள் உடனடியாக வெளியிடப்படாத போதிலும், பல ஆண்டுகளாக அவர் உடல்நலம் குன்றி இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ‘அமீரகம் தனது மகனையும், முன்னேற்றத்திற்காக வித்திட்ட ஒரு நல்ல தலைவனையும் இழந்துள்ளது’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    கலிஃபாவின் இறப்பிற்காக உலகின் பல இடங்களில் துக்கம் அனுசரிக்கப் படுகிறது. கேரள முதல்வர், மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி போன்றோரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்தனர்.

    அபுதாபியின் 16வது ஆட்சியாளராக தனது தந்தைக்குப் பிறகு 2004ம் ஆண்டு பொறுப்பேற்றார் ஷேக் கலிஃபா. அமீரகத்தில் மிகவும் செல்வ செழிப்பான நாடு அபுதாபி என்பது குறிப்பிடத்தக்கது.

    முறையான கல்வியை கலிஃபா பெறவில்லையெனினும், அமீரகத்தினை உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாகவும், முக்கியமான வர்த்தக நிலையமாகவும் மாற்றிய பெருமை கலிஃபாவுக்குச் சொந்தமானது.

    துபாய் 2009 ஆம் ஆண்டு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியினை சந்தித்த பொழுது பெரும் உதவி செய்தவர் ஷேக் கலிஃபா.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....