Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவாய்ப்பை தக்கவைத்த பஞ்சாப்; பிளே ஆஃபிற்குச் செல்லுமா பெங்களூர்?

    வாய்ப்பை தக்கவைத்த பஞ்சாப்; பிளே ஆஃபிற்குச் செல்லுமா பெங்களூர்?

    நேற்று மும்பையில் நடந்த 60வது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் பந்து வீச்சினை தேர்வு செய்தார்.

    முதல் இன்னிங்ஸ்

    இதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 66 (4 ஃபோர், 7 சிக்ஸர்) ரன்களைக் குவித்தார். உடன் ஆடிய ஷிகர் தவான் 15 பந்துகளை 21 (2ஃபோர், 1 சிக்ஸர்) ரன்கள் அடித்து தனது பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.

    இந்த ஜோடி முதல் ஐந்து ஓவர்களுக்கு 60 ரன்களைக் குவித்திருந்தது. 21 ரன்கள் அடித்திருந்த நிலையில் தவான், மேக்ஸ்வெல் பந்தில் அவுட் ஆனார். பின்னர் வந்த பானுகா ராஜபக்சா ஒரு ரன் அடித்து ஹஸரங்கா பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    இதன் பின்னர் வந்த லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியாக ஆடி 42 பந்துகளுக்கு 70 (5 ஃபோர், 4 சிக்ஸர்) ரன்கள் அடித்தார். லிவிங்ஸ்டன் மற்றும் பேர்ஸ்டோ அதிரடியால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்தது.

    பெங்களூரு அணித்தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளும், ஹஸரங்கா 2 விக்கெட்டுகளையும், ஷாபாஸ் அஹ்மத் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் எடுத்திருந்தனர்.

    இரண்டாம் இன்னிங்ஸ்

    210 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்கமும் வலுவாகவே இருந்தது. 3 ஓவர்களுக்கு 30 ரன்கள் குவித்திருந்த நிலையில் நன்றாக ஆடிய விராட் கோலி, ரபாடா பந்தில் எதிர்பாரா விதமாக ராகுல் சாஹரின் கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    பிளெஸ்ஸிஸ் 10 ரன்கள் அடித்திருந்த நிலையில் ரிஷி தவான் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த ரஜத் பட்டிதர் மற்றும் மேக்ஸ்வெல் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். நான்காவது விக்கெட்டுக்கு கைகோர்த்த இந்த ஜோடி 37 பந்துகளை 64 ரன்கள் எடுத்திருந்தது.

    26 (1 ஃபோர், 2 சிக்ஸர்) ரன்கள் அடித்திருந்த நிலையில் பட்டிதர், ராகுல் சாஹர் பந்தில் ஷிகர் தவனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் 35 (3 ஃபோர், 1 சிக்ஸர்) ரன்களுக்கு அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

    பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆக, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிப் பெற்றது

    பஞ்சாப் தரப்பில், ரபாடா 3 விக்கெட்டுகளையும், ரிஷி தவான், ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், ஹார்ப்ரீத் ப்ரார் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

    66 ரன்கள் அடித்த பேர்ஸ்டோவிற்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் தனது பிளே ஆஃப் வாய்ப்பினை பஞ்சாப் தக்க வைத்துள்ளது. பெங்களூரு அணிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அந்த போட்டியிலும் அபார வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    இன்று நடைபெறும் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியினை எதிர்கொள்கிறது. இரவு 7:30க்கு தொடங்கும் இப்போட்டி புனேவில் நடைபெற உள்ளது.

    டான் திரைப்படம் இளைஞர்களின் பார்வையில் எப்படி இருக்கு?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....