Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்டான் திரைப்படம் இளைஞர்களின் பார்வையில் எப்படி இருக்கு?

    டான் திரைப்படம் இளைஞர்களின் பார்வையில் எப்படி இருக்கு?

    சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே சூர்யா, சமுதிரக்கனி, சூரி உள்ளிட்டோர் நடித்த டான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை இயக்கியவர் சிபி சக்கரவர்த்தி; தயாரித்தவர் அலிராஜா சுபாஸ்கரர்; இசையமைப்பாளர் அனிருத் . படத்தை பார்த்துவிட்டு இளைஞர்கள் கூறிய கருத்துக்கள் என்னவென்று இங்கு பார்ப்போம். 

    • சிவகார்த்திகேயனின் இந்த படம் மற்ற படங்களை விட தனித்துவமாக இருக்கிறது. 
    • முதல் பாதி நல்ல நகைச்சுவை உள்ளது. இரண்டாம் பாதியில் நல்ல உணர்ச்சிவசப்படக் கூடிய காட்சிகள் உள்ளன. 
    • இந்தப் படம் கண்டிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும். 
    • சமுதிரக்கனி, எஸ்.ஜே சூர்யா மிக நன்றாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 
    • குடும்பமாக சென்று பார்த்திட நல்ல படம். 
    • நல்ல கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பிள்ளைகள் பெற்றோர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை நிலைநாட்டி இருகிறார்கள். 
    • சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே இந்தப்படம், அவர் அதிக உணர்ச்சிவசப்பட்டு நடித்து, மக்களின் கண்களில் கண்ணீர் வரவழித்த படம் இதுவாக தான் இருக்கும். 
    • டான் என்ற பெயர் திரைப்படத்திற்கு பொருந்தாமல் இருந்ததோ என்று தோன்றியது. பள்ளி மற்றும் கல்லூரியில் அழைக்கப்படுகிறார் ஆனால், ஆழமான கருத்து ஏதும் இல்லாததுபோல் உள்ளது. 
    • அனிருத் தன்னால் முடிந்த அளவு படத்தின் வெற்றிக்கு உதவி இருக்கிறார். 
    • அனிருத் இசை நன்றாக இருக்கிறது. இருப்பினும் இரண்டு மூன்று பாடல்கள் தான் இருக்கின்றன. 
    • சிவகார்த்திகேயனின் இந்தப்படம் நிச்சயம் குடும்ப ரசிகர்களை கவரும். 
    • முதல் பாதியில் நன்கு சிரித்தோம் இரண்டாம் பாதியில் படம் அழவைத்துவிட்டது. 
    • தந்தையை போற்றும் படமாக இருக்கிறது. தந்தை மகன் பாசப் பிணைப்பு பற்றி பேசிடும் படமாக இது நிச்சயம் இருக்கும் என்று தெரிவித்தனர். 
    • சிலர் சீரியல் கதை போன்று உள்ளதாகவும் தெரிவித்தனர். 
    • எல்லாருடைய வாழ்க்கையிலும் உள்ள எதார்த்தத்தை படத்தில் காட்டியுள்ளனர் என்று பல இளைஞர்கள் தெரிவித்தனர்.

    61 வருடங்களுக்குப் பிறகும், பல திரைப்படங்களில் இப்பாடல் ஒலிக்கிறது; ஏனென்றால்…….?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....