Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபலரும் எதிர்பார்த்த ஏற்காடு கோடை விழா நடைபெறும் தேதி இதுதானாம்!

    பலரும் எதிர்பார்த்த ஏற்காடு கோடை விழா நடைபெறும் தேதி இதுதானாம்!

    சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏற்காடு கோடை விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவைக் காண மக்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். கடந்த 2 வருடங்களாக, கொரோனா ஊரடங்கின் காரணமாக கோடை விழா நடைபெறவில்லை. கொரோனா வைரஸ் குறைந்துள்ள நிலையில், இந்த வருடம் 45 வது கோடை விழா நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    சேலத்தில் ஏற்காடு கோடை விழா, வருகின்ற மே மாதம் 26 ஆம் தேதி நடைபெறும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளமாகும். சுற்றுலாப் பயணிகள் கோடை காலத்தில், ஏற்காட்டை நோக்கி படையெடுப்பது வழக்கம்.

    கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள சேர்வராயன் மலைத் தொடரில் ஏற்காடு அமைந்துள்ளது. கடல் அடி மட்டத்தில் இருந்து 5326 அடி உயரத்தில் உள்ளது ஏற்காடு. இதனை “ஏழைகளின் ஊட்டி” என்றும் அழைப்பார்கள். இந்த சுற்றுலாத்தளம் சேலம் மாவட்டத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஏற்காட்டில் கோடை விழா, ஆண்டுதோறும் மே மாதத்தில் 7 நாட்கள் நடைபெறும். மக்கள் இந்த விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்த கோடை விழாவில், மலர் கண்காட்சி, மூலிகை கண்காட்சி, நாய் கண்காட்சி மற்றும் படகு போட்டிகள் நடைபெறும்.

    இந்த நிலையில் ஏற்காட்டில் 45 ஆவது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வருகின்ற மே மாதம் 26 ஆம் தேதி துவங்கும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கோடை விழா மே 26 ஆம் தேதி துவங்கி, ஜூன் 1ஆம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்காடு கோடை விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் இருந்து ஏற்காடு வரை சிறப்பு பேருந்துகள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது‌. கோடை விழாவிற்கு ஏற்காடு அண்ணா பூங்காவில் 5 இலட்சம் மலர் கண்காட்சி மற்றும் மாம்பழக் கண்காட்சி நடைபெறுகிறது. ஏற்காட்டில் உள்ள முக்கியமான இடங்களை ஒரு நாள் முழுவதும் சுற்றிக் காட்ட பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.என் .நேரு. தெரிவித்துள்ளார்

    நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து ராஜபக்சவின் மகன் அதிரடி கருத்து!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....