Tuesday, May 16, 2023
மேலும்
  Homeசெய்திகள்இலங்கைநாட்டை விட்டு வெளியேறுவது குறித்து ராஜபக்சவின் மகன் அதிரடி கருத்து!

  நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து ராஜபக்சவின் மகன் அதிரடி கருத்து!

  என் தந்தை பாதுகாப்பாகவும் குடும்பத்துடன் தொடர்பிலும் உள்ளார், நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் ஒருபோதும் எங்கள் குடும்பத்துக்கு இல்லை என இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சே கூறியுள்ளார்.

  இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், மக்கள் மீது மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் பதில் தாக்குதல் கலவரமாக மாறியது.

  இலங்கை ஆட்சியாளர்கள், எம்பிக்கள், மகிந்த-வின் உறவினர்களுக்கு சொந்தமான சொத்துகள், வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதோடு, அவை சொந்த நாட்டு மக்களாலேயே தீக்கிரையாகும் காட்சிகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

  பிரதமர் மந்த ராஜபக்சே பதவி விலகியதால் அதிர்ச்சி அடைந்த அவரது ஆதரவாளர்கள் கொழும்புவில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவினர். இலங்கை இதுவரைக்கும் காணாத வன்முறையாக இது அமைந்திருக்கிறது.

  இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் ராஜபக்சே ஆதரவாளர்கள் 58 பேரின் வீடுகள் தீக்கிரையாகின. முன்னாள், தற்போதைய அமைச்சர்களின் வீடுகளும் தீக்கிரையாகின.

  ராஜபக்சே அவரது இல்லத்தில் இருந்து வெளியேறுவதற்குள் அவர்கள் அருகில் 10 பெட்ரோல் குண்டுகள் எறியப்பட்ட விடீயோக்கள் வெளியாகின. கொழும்பிலிருந்து ராஜபக்சேவின் குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் சென்று தளபதியின் வீட்டு பாதாள அறையில் தஞ்சம் அடைந்து இருப்பதாக தகவல்.

  இலங்கை பிரதமர் பதவியில் இல்லாததால் ராஜபக்சேவின் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து இருக்கிறது. இதனால் ராஜபக்சே அச்சத்தில் இருப்பதாகவும், வெளிநாட்டிற்கு தப்பித்து ஓடப்போவதாகவும் தகவல் வருகிறது. போராட்டக்காரர்களுக்கு பயந்து, மக்கள் கொதித்தெழுந்ததும் நாட்டை விட்டு ஓடுகிறாரே என்று பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

  கடைசி வரைக்கும் மக்களோடு நின்ற பிரபாகரன் எங்கே? ஓடிப்போகும் ராஜபக்சே எங்கே? என்று பலரும் விமர்சித்து வரும் நிலையில், நாட்டை விட்டு நாங்கள் எங்கேயும் ஓடவில்லை. ஓடவும் மாட்டோம் என்று ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

  “கடந்த திங்கட்கிழமை அன்று நடந்த அந்த துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக எந்த ஒரு விசாரணைக்கும் நான் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன். எனக்கோ என் தந்தை ராஜபக்சேவுக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. நாட்டை விட்டு நாங்கள் வெளியேறப் போவதாக வெளியாகும் தகவல் அனைத்தும் பொய்யானது. எங்கள் மீது சுமத்தப்படும் எந்த பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாங்கள் சந்திக்க தயார்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

  இதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்பி ஒருவரும் அடங்குவார். இந்நிலையில், இலங்கை மக்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

  சென்னையை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்; பிளே ஆஃப் கனவு தகர்ந்ததா?

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....