Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்இன்றைய ராசிபலன்கள் - உங்கள் அன்பை நீங்கள் வெளிப்படுத்துவீர்களாம்! படியுங்கள்!

    இன்றைய ராசிபலன்கள் – உங்கள் அன்பை நீங்கள் வெளிப்படுத்துவீர்களாம்! படியுங்கள்!

    மேஷம்:

    இன்றைய நாள் நீங்கள் விரும்பத்தக்கதாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். உங்கள் பணியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் அன்பை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இன்று பணம் சம்பாதிப்பதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்வீர்கள். உங்களிடம் காணப்படும் உற்சாகமான மன ஆற்றல் காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    ரிஷபம்:

    இன்றைய நாள் சுமூகமாகவும் வெற்றிகரமாகவும் அமைய நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். திட்டமிட்டு செயலாற்றுவதன் மூலம் பணிகளைக் குறித்த நேரத்திற்கும் முடிப்பீர்கள். அன்பும் புரிந்துகொள்ளுதலும் குடும்ப வாழ்வை சிறப்பாக்கும். பண வரவு குறைந்து காணப்படும். தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள நேரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    மிதுனம்:

    இன்றைய நாள் பயனுள்ளதாக இருக்காது. குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் தெளிவாக எண்ண வேண்டும். உங்கள் அன்றாட பணிகளுடன் வேறு பணிகளையும் ஆற்றுவீர்கள். உங்கள் உணர்ச்சிகளை முறையாக கட்டுப்படுத்த வேண்டும். இதனால் குடும்ப உறவுப் பாதிக்கப்படும். இன்று அதிர்ஷ்டமான நிதிநிலைமை காணப்படாது. முடிந்தவரை பதட்டமின்றி இருக்க முயலுங்கள்.

    கடகம்:

    இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி உங்களுக்கு சாதகமாக அமையும் நாள். உங்கள் பணியைப் பொறுத்தவரை சிறப்பான நிலையில் இருப்பீர்கள். உங்கள் கருத்துக்களை உங்கள் துணையுடன் இனிமையான முறையில் பகிர்ந்து கொள்வீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இன்று மொத்தத்தில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    சிம்மம்:

    இன்று உங்கள் பொறுப்புகள் அதிகமாக காணப்படும். திட்டமிட்டு முன்னுரிமைப்படி பணியாற்றினால் எல்லாப் பணிகளையும் எளிதாக முடிக்கலாம். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பை பரிமாறிக் கொள்வது, அதுவும் கஷ்ட நேரங்களில் பரிமாறிக் கொள்வது உறவில் மிகவும் அவசியம். உங்களிடம் அதிக பணம் இல்லாவிட்டாலும் இருக்கும் பணத்தில் எப்படி வாழ வேண்டும் என்று அறிந்திருப்பீர்கள். ஆரோக்கியத்திற்கு பணம் செலவு செய்ய நேரலாம்.

    கன்னி:

    இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். தியானம் மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும். செயல்களை திட்டமிட வேண்டும் மற்றும் அதன்படி முடிக்க வேண்டும். உங்கள் துணையுடன் நல்லுறவு பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பயணத்தின் போது குறைந்த அளவில் பணத்தை கையில் எடுத்துச் செல்லுங்கள்.

    துலாம்:

    நீங்கள் அதிகப்படியாக செயலாற்றினால் வெற்றியைக் காண நேரலாம். பணி இடங்களில் இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். பணத்தை சேமிப்பது அதுவும் இன்று சேமிப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். இன்று கால் வலி ஏற்படும் என்பதால் லேசான உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.

    விருச்சிகம்:

    இன்று இனிமையான சாதகமான நாள். நீங்கள் எந்தப் பணி செய்தாலும் அதில் இன்று வெற்றி கானபீர்கள். உங்கள் துணையுடன் பேசி அளவளாவுவீர்கள். பணம் அபரிமிதமாக காணப்படும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    தனுசு:

    இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் துணையுடன் விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ள வேண்டிய நேரம். வெளி நாட்டிலிருந்து பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    மகரம்:

    முக்கிய முடிவுகள் எடுப்பதை வேறு ஒரு நாளைக்கு தள்ளிப்போடுங்கள். பணியிடத்தில் திட்டமிட்டு வேலை செய்தால் பலன் கிடைக்கும். உங்கள் துணையிடம் பேசும் போது புரிந்துகொண்டு பொறுமையாக பேச வேண்டும். நீங்கள் அதிகமாக செலவு செய்வீர்கள். உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.

    கும்பம்:

    இன்று சிறப்பான பலன்கள் கிடைக்காது. பணிகளை சரியான விதத்தில் கையாண்டால் சுமை குறைவாகத் தெரியும். நல்ல வார்த்தைகளை பரிமாறிக் கொள்வதன் மூலம் இன்றைய நாளை சிறந்ததாக ஆக்கலாம். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை விட அதிகம் பணம் இன்று உங்களுக்கு தேவையாக இருக்கும். உங்கள் தாயின் ஆரோக்கியத்திற்காக இன்று பணம் செலவு செய்ய நேரும்.

    மீனம்:

    நீங்கள் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். இன்று உங்களுக்கும் உங்கள் துணைக்கும் மிகவும் இனிமையான மகிழ்ச்சியான நாள். இன்று கணிசமான பணம் சேமிப்பீர்கள். இன்று முழுவதும் நீங்கள் ஆரோக்கியமாக காணப்படுவீர்கள்.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....